» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஊரக வளர்ச்சி முகமையில் ஆய்வக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

செவ்வாய் 22, ஏப்ரல் 2025 4:51:50 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் ஆய்வக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின்கீழ் தக்கலை ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் செயல்பட உள்ள பத்மநாபபுரம் உட்கோட்ட தரக்கட்டுப்பாடு ஆய்வு கூடத்திற்கு ஆய்வக உதவியாளர் (Lab Attender) தொகுப்பூதியத்தில் வெளிநிரவல் அடிப்படையில் பணிநியமனம் செய்வதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வி தகுதி Diploma in Civil Engineering முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு விண்ணப்பிக்கும் நாளில் 18 வயது பூர்த்தியானவராகவும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். சாலைகள் மற்றும் பாலங்களில் கட்டுமான பொருட்கள் தரக்கட்டுபாடு சோதனை செய்யும் புகழ் பெற்ற ஆய்வு கூடத்தில் பணியாற்றி 5 வருட அனுபவம் மற்றும் எல்லா விதமான கட்டுமான பொருட்களிலும் தரக்கட்டுபாடு சோதனை செய்யும் முழுமையான தொழில்நுட்பம் தெரிந்தவராக இருக்க வேண்டும். 

மாத தொகுப்பூதியம் ரூ.12000/- மட்டும் வழங்கப்படும். விண்ணப்பம் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட ஆட்சியரகம் கன்னியாகுமரி மாவட்டம் அலுவலகத்தில் 23.04.2025 முதல் 07.05.2025 மாலை 5.45 -க்குள் அனுப்பிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory