» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
விஜய் பேசினால் த.வெ.க.வுடன் கூட்டணி: நாம் இந்தியர் கட்சி தலைவர் என்.பி.ராஜா பேட்டி
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 3:44:01 PM (IST)

"தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தேர்தல் நேரத்தில் எங்களை அணுகினால் கூட்டணி குறித்து முடிவு செய்வோம்" என்று நாம் இந்தியர் கட்சியின் தலைவர் என்.பி.ராஜா கூறினார்.
நாம் இந்தியர் கட்சியின் மாநிலத் தலைவர் என்.பி.ராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாம் இந்தியர் கட்சியின் மாநிலச் செயலாளர் பொன்ராஜ், மாநில பொருளாளர் ஜெயகணேஷ் உள்ளிட்ட நாம் இந்தியர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் நாம் இந்தியர் கட்சியின் தலைவர் என்.பி.ராஜா கூறியதாவது; நாம் இந்தியர் கட்சி தமிழகத்தை நிர்வாகம் பண்ண வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது. கட்சி ஆரம்பித்து கடந்த ஏழு வருடங்களாக நாம் இந்தியர் கட்சி படிப்படியாக வளர்ந்து வருகிறது. 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் நாம் இந்தியர் கட்சி உறுதியாக போட்டியிடும்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் திரும்பி பார்க்கும் வகையில் நாம் இந்தியர் கட்சி அதிக தொகுதிகளில் போட்டியிடும். தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
தமிழகத்தின் தற்போதைய தேர்தல் நிலையானது பிரம்மாண்டமான தேர்தல் திருவிழா, அன்பளிப்புகள் என்ற நிலையே நீடிக்கிறது. தேர்தல் சமயங்களில் ஆளுகிற கட்சியோடு கூட்டணி அமைத்து கொண்டால் தான் மக்களுக்கான திட்டங்களை தடையில்லாமல் கொண்டு போய் சேர்க்க முடியும். தமிழகத்தில் இரண்டு பெரிய கூட்டணி அமைந்துள்ளது.
விஜய் செல்வாக்கான நடிகர் அவரும் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ளார். தோல்வியை சந்திக்க தயாரான அரசியல்வாதிகள் மட்டுமே தமிழகத்தில் நிலைக்க முடியும். மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தேர்தல் நேரத்தில் எங்களை அணுகினால் கூட்டணி குறித்து முடிவு செய்வோம். ஒன்று அல்லது இரண்டு சீட்டுக்காக போய் நிற்கப் போவதுமில்லை என நாம் இந்தியர் கட்சியின் மாநிலத் தலைவர் என்.பி. ராஜா தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது பள்ளி பேருந்து மோதி விபத்து: 2 இளைஞர்கள் உயிரிழப்பு!
புதன் 7, ஜனவரி 2026 11:12:54 AM (IST)

தக்கலையில் 8ஆம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்: ஆட்சியர் ஆய்வு
செவ்வாய் 6, ஜனவரி 2026 5:30:33 PM (IST)

கோதையாற்றில் மீண்டும் தென்பட்ட முதலை: திற்பரப்பு அருகே பரபரப்பு !
செவ்வாய் 6, ஜனவரி 2026 4:41:22 PM (IST)

சிறுமி கடத்தல்: தலைமறைவான அண்ணன், தம்பி தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!
செவ்வாய் 6, ஜனவரி 2026 12:13:24 PM (IST)

தமிழ்நாட்டில் ரயில்வே முனைய திறனை அதிகரிக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
திங்கள் 5, ஜனவரி 2026 4:58:43 PM (IST)

பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வீடு வீடாக விநியோகம்: ஆட்சியர் ஆய்வு
திங்கள் 5, ஜனவரி 2026 4:48:37 PM (IST)

