» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சிறார்கள் ஓட்டி வந்த 19 பைக்குகள் பறிமுதல்: குமரி மாவட்ட காவல்துறை அதிரடி!
சனி 29, மார்ச் 2025 12:33:44 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறார்கள் ஓட்டி வந்த 19 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பெற்றோர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித்குமார் மேற்பார்வையில், நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறையினர் பட்டகசாலியன்விளை பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, வடசேரியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி மாதம் முதல் மொத்தம் 19 சிறார்களின் பெற்றோர்கள் மீது இளையோர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதித்த குற்றத்திற்காக "JUVENILE DRIVING CASE" under section 199A Motor Vehicle Act படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் இவ்வழக்குகள் கோப்புக்கு எடுக்கப்படும் பட்சத்தில், சிறார்களின் பெற்றோர்களுக்கு ரூ 25000 அபராதம், மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை, ஒரு வருடம் வாகன பதிவு ரத்து, சிறார்களுக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்க தடை போன்ற தண்டைனைகள் விதிக்கப்படும். ஆகவே, பள்ளி விடுமுறை காலங்கள் வர உள்ள நிலையில், சிறார்கள் வாகனங்கள் இயக்காதவாறு பெற்றோர்கள் கவனமாக செயல்படுமாறு நாகர்கோவில் போக்குவரத்து காவல் நிலையத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேளாங்கண்ணி சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:36:37 PM (IST)

கன்னியாகுமரியில் மாபெரும் காத்தாடி திருவிழா: சுற்றுலாத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 11:03:05 AM (IST)

பேரூராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவர் கட்சியிலிருந்து நீக்கம் - சிபிஎம் அதிரடி!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 3:51:42 PM (IST)

குமரி மாவட்டத்தில் ரூ.1041 கோடியில் நெடுஞ்சாலை பணிகள் : ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 12:04:00 PM (IST)

தோவாளையிலிருந்து கேரளாவுக்கு மலர்கள் கொண்டு செல்ல சிறப்பு 'மேமு' ரயில்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 5:52:59 PM (IST)

தாயைக் கொன்று ஜாமீனில் வந்த வாலிபர் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் குத்திக் கொன்ற கொடூரம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 8:48:42 AM (IST)


