» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கோழிக்கோடு சி.எஸ்.ஐ. தமிழ் ஆலய பிரதிஷ்டை விழா: குமரிப் பேராயர் செல்லையா பங்கேற்பு!
சனி 15, பிப்ரவரி 2025 8:32:14 AM (IST)

கோழிக்கோடு சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் தமிழ் ஆலய பிரதிஷ்டை விழாவில் கன்னியாகுமரி பேராயர் செல்லையா பங்கேற்றார்.
கேரளா மாநிலம் கோழிக்கோடு சலப்புரத்தில் தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து கோழிக்கோடு பகுதியில் வசிக்கும் தமிழர்களால் புதிதாக கட்டப்பட்ட கிறிஸ்துநாதர் தமிழ் ஆலயத்தின் பிரதிஷ்டை விழா நடைபெற்றது.
விழாவிற்கு சி.எஸ்.ஐ. மலபார் திருமண்டல பேராயர் ராய்ஸ் மனோஜ் விக்டர் தலைமை தாங்கி புதிய தமிழ் ஆலயத்தை ஜெபித்து பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தார். கோழிக்கோடு குருவானவர் பிரைட் ஜெய்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக கன்னியாகுமரி பேராயர் செல்லையா, திருநெல்வேலி திருமண்டல லே செயலர் ஜெயசிங், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
புதிய தமிழ் ஆலய பிரதிஷ்டை விழா சிறப்பு ஆராதனையில் பாடகர்குழு ஒருங்கிணைப்பாளர் சாலமோன் தலைமையில் பாளையங்கோட்டை "ஸ்கைலார்க்" பாடகர் குழுவினர் சிறப்பு பாடல்களைப் பாடினர். பாடகர் குழு தலைவர் ஜாண் மற்றும் ஜாஸ்பர் ஆர்கன் இசை இசைத்தனர். அதைத் தொடர்ந்து சிறப்பு திருவிருந்து ஆராதனை நடைபெற்றது.
பின்னர் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களுக்கு மலபார் பேராயர் ராய்ஸ் மனோஜ் விக்டர் நினைவு பரிசு வழங்கினார். கோழிக்கோடு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.ராகவன், மாநகராட்சி மேயர் டாக்டர் பீனா பிலிப், மலபார் திருமண்டல குருத்துவ செயலர் ஜேக்கப் டேனியல், பொதுச் செயலாளர் கென்னட் லாசர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சபை மக்கள் அனைவருக்கும் இனிப்பு பார்சல் வழங்கப்பட்டது. நிறைவாக விழாக்குழு செயலர் சாலமோன் நன்றி கூறினார்.
விழாவில் கோழிக்கோடு மறைமாவட்ட அலுவலகப் பொறுப்பாளர்கள், சலப்புரம் பாஸ்ட்ரேட் கமிட்டி உறுப்பினர்கள், மற்றும் தமிழகத்தின் பல்வேறு திருமண்டலங்களில் இருந்தும் திருச்சபை மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்திட அமைச்சர் அறிவுறுத்தல்!
வெள்ளி 11, ஜூலை 2025 10:50:26 AM (IST)

திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி பயணிகள் ரயில்கள் இயக்க கோரிக்கை
வியாழன் 10, ஜூலை 2025 5:21:07 PM (IST)

குமரி மாவட்டத்தில் 8 நாட்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!!
புதன் 9, ஜூலை 2025 8:26:11 PM (IST)

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)

பிளஸ்-2 மாணவி பலாத்காரம்: திருமணமான வாலிபர் மீது போக்சோ வழக்கு
புதன் 9, ஜூலை 2025 8:19:31 PM (IST)

சுற்றுலா திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அழைப்பு!
புதன் 9, ஜூலை 2025 5:19:37 PM (IST)
