» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மருத்துவ வசதிகளை மேம்படுத்த கோரி விவாதம்: பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை!
வியாழன் 13, பிப்ரவரி 2025 11:34:34 AM (IST)
மருத்துவ வசதிகளை மேம்படுத்த கோரி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என விஜய் வசந்த் எம்.பி ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்துள்ளார்.
இந்தியாவில் குறிப்பாக ஊரகங்களில் மக்கள் மருத்துவ வசதிகளை பெறுவதில் உள்ள குறைபாடுகள் குறித்து பாராளுமன்றத்தில் விவாதித்து நோயற்ற சமூகத்தை உருவாக்க அரசு முன் வர வேண்டும். அதற்காக பாராளுமன்றத்தில் விவாதம் தேவை என கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்துள்ளார்.
இந்த பட்ஜெட்டில் சுகாதாரத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கிய போதிலும் அது நமது தேசத்தின் சுகாதார மேம்பாட்டிற்கு போதுமானதாக இல்லை. நமது நாட்டின் வளர்ச்சி விகிதத்தின் 10 சதவிகிதம் சுகாதார மேம்பாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிலையில் இன்று அரசு வெறும் 2 சதவிகிதம் மட்டுமே ஒதுக்கியுள்ளது. உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் போதிய நிதியினை அரசு ஒதுக்கவில்லை. இந்தியாவில் மருத்துவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. 1000 நபர்களுக்கு ஒரு மருத்துவர் தேவை என்ற றுர்ழு வழிகாட்டுதலை விட குறைவாக 1500 இந்தியர்களுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை உள்ளது. குறிப்பாக கிராமங்களில் இந்த குறைபாடு மிக அதிக அளவில் காணப்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள மருத்துவமனைகளில் 1/4 பங்கு காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.
இந்தியாவின் 50 சதவிகிதம் மருத்துவமனைகளில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. கோவிட் காலகட்டத்தில் நமது மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகள் குறித்து நாம் கண்டறிந்தோம். அது போன்ற ஒரு இடரை எதிர்கொள்ள நமது நாட்டில் மருத்துவ வசதிகளை மேம்படுத்தி நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
இந்தியர்களின் மருத்துவ செலவில் 62 சதவிகிதம் தங்கள் சொந்த காசில் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நமது மக்கள் உள்ளனர். ஆரோக்கியமான ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டியது அரசின் கடமை. இவற்றை குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என கோரி ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை முன்மொழிந்துள்ளேன்" என தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிருஷ்ணன்கோவில் நியாயவிலைக்கடையில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா திடீர் ஆய்வு
புதன் 19, மார்ச் 2025 5:07:27 PM (IST)

வேலைவாய்ப்புகளை பெருக்க தவறிய மத்திய அரசு: பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி பேச்சு
புதன் 19, மார்ச் 2025 4:14:06 PM (IST)

தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுக பணிகள் விரைவில் துவங்கும்: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 18, மார்ச் 2025 3:49:03 PM (IST)

கன்னியாகுமரியில் மும்பை சிறப்பு ரயில் புறப்படும் நேரம் மாற்றம்
செவ்வாய் 18, மார்ச் 2025 11:49:32 AM (IST)

ஆதிச்சன்புதூர் குளத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
செவ்வாய் 18, மார்ச் 2025 11:35:02 AM (IST)

நாகர்கோவிலில் இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் இயக்கம் : தெற்கு ரயில்வே தகவல்!
செவ்வாய் 18, மார்ச் 2025 11:03:29 AM (IST)
