» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் பணம் திருட்டு: மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

செவ்வாய் 11, மார்ச் 2025 5:47:57 PM (IST)

மாா்த்தாண்டம் அருகே ஓடும் பேருந்தில் மூதாட்டியின் கைப்பையில் இருந்த பணம் மற்றும் காசோலையை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

குமரி மாவட்டம், களியக்காவிளை அருகேயுள்ள வன்னியூா் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் பிள்ளை மனைவி சுகன்யா குமாரி (75). இவா், மாா்த்தாண்டத்தில் இருந்து களியக்காவிளைக்கு அரசுப் பேருந்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததாம். இதை பயன்படுத்திக் கொண்ட மா்மநபா் சுகன்யா குமாரி வைத்திருந்த கைப்பையை திருடிச் சென்றுள்ளாா். அதில் ரூ.85 ஆயிரம் மற்றும் வங்கி காசோலைகள் இருந்ததாம்.

இதுகுறித்து சுகன்யா குமாரி அளித்த புகாரின் பேரில், மாா்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிந்து, பணம் மற்றும் காசோலையை திருடிச் சென்ற மா்ம நபரை தேடி வருகிறாா்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory