» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பிரசவித்த பின் குழந்தைகளின் செவித்திறன்களை நன்கு ஆராய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்

சனி 5, ஜூலை 2025 12:41:12 PM (IST)



கர்ப்பிணி பெண்கள் பிரசவித்த பின் குழந்தைகளின் செவித்திறன்களை நன்கு ஆராய வேண்டும் என்று காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாட்டில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வேண்டுகோள் விடுத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் இன்று (05.07.2025) நடைபெற்ற காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாட்டில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, கலந்து கொண்டு பேசுகையில் - கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாடு ஜூலை 4-ம் தேதி முதல் ஜூலை 6-ம் தேதி வரை நடைபெறுகிறது. 

மனிதர்களுக்கு காது, மூக்கு, தொண்டை என்பது மிகவும் முக்கியமான உறுப்புகளாகும். இந்த உறுப்புகளை நாம் மிகவும் கவனமாக பராமரிக்க வேண்டும். பிறக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்களுக்கு சளி ஏற்பட்டால் அதனை மிகவும் கவனமுடன் கையாள்வதோடு, காது, மூக்கு, தொண்டை மருத்துவர்களை உடனடியாக அணுக வேண்டும். சளி (சைனஸ்) பிரச்சனை உள்ளவர்களுக்கு சளி வெளியேறாமல் இருந்தால் அச்சளி காது, மூக்கு, தொண்டைகளில் அடைப்படுகிறது. 

கவனிக்கப்படாத நாள்பட்ட சளியினால் காது கேளாமை, வாய்பேச முடியாத நிலை, முச்சுத்திணறல் ஏற்படுகிறது. இந்நோய் பிறக்கும் குழந்தைகளில் ஆயிரத்தில் ஒரு குழந்தைக்கு ஏற்படுகிறது. எனவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிசிச்சை மேற்கொள்ள வேண்டும். ஆரம்பத்திலேயே கண்டறியப்படும் நோய்க்கு தீர்வு கிடைக்கும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு இதுபோன்ற மாற்றுத்திறன் படைத்த குழந்தைகள்மேல் அதிக அக்கறை கொண்டு அவர்களுக்கு என பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட செல்லிடைப்பேசி, காது கேட்கும் கருவி வழங்குவதோடு, வாய்ப்பேச முடியாத குழந்தைகளுக்கு பேச்சுப்பயிற்சியும் வழங்கப்படுகிறது. 

குறிப்பாக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரு ஆண், ஒரு பெண் மருத்துவர் கொண்ட குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் அங்கன்வாடி மையங்களில் இத்தகைய குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

தொடர்ந்து மாநாட்டில் கலந்து கொண்ட காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்கள், ஆராய்சியாளர்கள், மருத்துவர்களிடம் கர்ப்பிணி தாய்மார்கள் பிரசவித்த பின் அக்குழந்தையின் காது, மூக்கு, தொண்டை ஆகிய உறுப்புகளில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்பதை நன்கு ஆராய வேண்டும். குறைபாடு கண்டறியப்படும் குழந்தைகளுக்கு அப்போதே தகுந்த சிகிச்சைகள் அளிப்பதன் மூலம் மாற்றுத்திறன் படைத்த குழந்தைகளின் எண்ணிக்கையினை குறைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா பேசினார்.

நிகழ்ச்சியில் மருத்துவ பொறியியல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் பத்மஸ்ரீ மோகன் காமேஸ்வரன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்கள் சுரேஷ் பாலன் (பொ), கன்னியாகுமரி, அருள் சுந்தரேஸ்குமார் (மதுரை), முத்து சித்ரா (தேனி), அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் கிங்ஸிலி ஜெபசிங், உறைவிட மருத்துவர் விஜயலெட்சுமி, உதவி உறைவிட மருத்துவர் ரெனிமோல், பேராசிரியிர் (காது, மூக்கு, தொண்டை) ஜூட் அன்சலாம் சைரஸ், உதவி பேராசிரியர் கணபதி, மருத்துவர்கள், செவிலியர்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory