» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கன்னியாகுமரியில் விமான நிலையம் : பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம். பி கோரிக்கை
செவ்வாய் 11, மார்ச் 2025 5:49:51 PM (IST)
கன்னியாகுமரியில் பசுமை விமானநிலையம் அமைக்க மத்திய அரசு முன் வர வேண்டும் என பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்பி கோரிக்கை வைத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல புகழ் வாய்ந்த சுற்றுலா தலங்கள் உள்ளது. பிற நாடுகள் மற்றும் பிற மாநிலத்தில் உள்ள சுற்றுலா பயணிகள் லட்சகணக்கில் குமரியில் ஆண்டு தோறும் வந்து செல்கின்றனர். இந்தியாவின் தென் கோடியில் உள்ள குமரி மாவட்டத்திற்கு வந்து செல்வதற்கு போக்குவரத்து ஒரு சவாலாக உள்ளது. உலகமெங்கும் உள்ள சுற்றுலா பயணிகள் எளிதில் குமரிக்கு வருகை தர இந்த விமான நிலையம் மிக அவசியம்.கன்னியாகுமரியை உலக தரம் வாய்ந்த சுற்றுலா மையமாக்க இங்கு ஒரு விமான நிலையம் மிக அவசியம். இங்கு ஒரு விமான நிலையம் அமையும் பட்சத்தில், இது இந்திய, தமிழக பொருளாதாரத்தை மேம்படுத்த பெரிதும் உதவும். எமது மாவட்டத்தின் வேலை வாய்ப்பை பெருக்கவும், இந்த பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும் விமான நிலையம் துணை நிற்கும்.
மேலும் இந்த பகுதிக்கு ஏராளமான முதலீட்டை கொண்டு வருவதுடன் கன்னியாகுமரியை உலக சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற செய்ய ஒரு விமான நிலையம் தேவை. கன்னியாகுமரியில் ஒரு விமான நிலையம் தேவை என்ற மக்களின் நீண்ட நாள் கனவை நிஜமாக்கிட இந்த அவையின் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன் என தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடம் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:12:56 PM (IST)

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி: ஆட்சியர் ஆய்வு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:53:00 PM (IST)

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயிலில் நாளை ஹனுமான் ஜெயந்தி விழா
வியாழன் 18, டிசம்பர் 2025 3:42:39 PM (IST)

சட்டவிரோதமாக செயல்பட்ட கல்குவாரியில் எஸ்பி ஆய்வு : மேற்பார்வையாளர் கைது!
வியாழன் 18, டிசம்பர் 2025 12:06:04 PM (IST)

நாகர்கோவிலில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் தகவல்!
வியாழன் 18, டிசம்பர் 2025 10:42:55 AM (IST)


.gif)
ஓ அப்படியாMar 11, 2025 - 06:55:17 PM | Posted IP 172.7*****