» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அங்கன்வாடி உதவியாளர்களுக்கு பதவி உயர்வு ஆணை: ஆட்சியர் அழகுமீனாவழங்கினார்
திங்கள் 27, ஜனவரி 2025 3:41:41 PM (IST)

குமரி மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் 10 ஆண்டுகள் உதவியாளராக பணிபுரிந்து, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 12 உதவியாளர்களுக்கு பதவி உயர்வு பணி ஆணைகளை ஆட்சியர் அழகுமீனா வழங்கினார்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (27.01.2025) நடைபெற்றது. கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 553 கோரிக்கை மனுக்கள் இன்று பெறப்பட்டது.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்களில் 10 ஆண்டுகள் உதவியாளராக பணிபுரிந்து, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 12 உதவியாளர்களுக்கு அங்கன்வாடி பணியாளர் பதவி உயர்வுக்கான பணி ஆணைகள் வழங்கினார்.
நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) செந்தில்வேல்முருகன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சேக் அப்துல்காதர், நாகர்கோவில் நகர துணை காவல் கண்காணிப்பாளர் பாலாஜி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக்குகள் மோதி விபத்து: ஜவுளிகடை உரிமையாளர் சாவு
செவ்வாய் 11, மார்ச் 2025 7:57:26 PM (IST)

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
செவ்வாய் 11, மார்ச் 2025 7:54:35 PM (IST)

கன்னியாகுமரியில் விமான நிலையம் : பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம். பி கோரிக்கை
செவ்வாய் 11, மார்ச் 2025 5:49:51 PM (IST)

ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் பணம் திருட்டு: மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
செவ்வாய் 11, மார்ச் 2025 5:47:57 PM (IST)

புனேயில் இருந்து கன்னியாகுமரிக்கு கடத்தி வந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல்!!
செவ்வாய் 11, மார்ச் 2025 10:28:59 AM (IST)

ஆந்திராவில் இருந்து சரக்கு ரயிலில் 2,600 டன் ரேசன் அரிசி நாகர்கோவிலுக்கு வந்தது
திங்கள் 10, மார்ச் 2025 8:38:31 PM (IST)
