» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பொங்கல் பரிசுத்தொகுப்பு: விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்பு கொள்முதல்!
சனி 4, ஜனவரி 2025 5:42:47 PM (IST)

குமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பில் வழங்குவதற்காக மதுரையில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பில் "தமிழக முதலமைச்சர் 2025ம் ஆண்டு பொங்கல் திருநாளை தமிழ்நாடு மக்கள் சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, மற்றும் முழுக்கரும்பு சேர்த்து வழங்கப்படும் என ஆணை வெளியிட்டுள்ளார்கள்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 121 கூட்டுறவு நிறுவனங்களின் கீழ் செயல்படும் 581 நியாய விலைக்கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் செயல்படும் 135 நியாய விலைக்கடைகள், இதர கூட்டுறவின் கீழ் செயல்படும் 46 நியாய விலைக்கடைகள், சுயஉதவிக்குழு வால் நடத்தப்படும் 3 நியாய விலைக்கடைகள் என மொத்தம் 765 நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 577849 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
பொங்கல் பரிசுத்தொகுப்பில் வழங்கப்பட உள்ள கரும்பு கொள்முதல் செய்ய கூட்டுறவுத்துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்களைக் கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வட்டார அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு அக்குழுக்கள் அண்டை மாவட்டமான மதுரையில் கரும்பு விளைவிக்கப்படும் இடங்களுக்கு சென்று விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு 09.01.2025 முதல் 13.01.2025 வரை வழங்கப்பட உள்ள நிலையில் அதற்காக 03.01.2025 முதல் குடும்ப அட்டைதாரர்களின் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடைக்கோடியில் உள்ள மாற்றுத்திறனாளிக்கும் அரசு சேவைகள்: ஆட்சியர் அழகுமீனா தகவல்
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:18:52 PM (IST)

சிறப்பு கல்வி கடன் முகாமில் ரூ.1.87 கோடி மதிப்பில் கடனுதவி : எம்எல்ஏ தகவல்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:43:29 PM (IST)

ஊருக்குள் நுழைந்த கனரக வாகனங்களுக்கு அபராதம்: போக்குவரத்து போலீசார் அதிரடி!
வியாழன் 18, செப்டம்பர் 2025 3:39:13 PM (IST)

அதிக பாரம் ஏற்றி வந்த 6 கனரக வாகனங்களுக்கு ரூ. 2.1 லட்சம் அபராதம்: போலீசார் நடவடிக்கை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 10:43:29 AM (IST)

அக்மார்க் தரச்சான்று பெறுவதற்காக பதிவு கட்டணம் ரூ.5000லிருந்து ரூ.500-ஆக குறைப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 4:55:58 PM (IST)

தேசிய ஆயுர்வேத தின விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
புதன் 17, செப்டம்பர் 2025 4:21:01 PM (IST)
