» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் கைது : 120 கிராம் தங்க நகை மீட்பு!
புதன் 4, டிசம்பர் 2024 4:24:59 PM (IST)
25க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியை கன்னியாகுமரி தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ராமஜெயம் என்பவர் மீது கோவை சிவகங்கை, திருவண்ணாமலை, கன்னியாகுமரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் உள்ளன.
அனைத்து மாவட்டங்களில் குற்றவாளியை தேடி வந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தனிப்படை உதவி ஆய்வாளர் மகேஸ்வரர் ராஜ் தலைமையில் காவலர்கள் தேடி வந்த நிலையில் இவரது செல்போன் சிக்னலை வைத்து துரிதமாக செயல்பட்டு புதுச்சேரியில் பதுங்கி இருந்த அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 120 கிராம் தங்க நகை மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை பறிமுதல் செய்தனர்.