» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
புயல் சேதங்களுக்கு 1,000 கோடி நிவாரண நிதி ஒதுக்க வேண்டும் : விஜய்வசந்த் கோரிக்கை
திங்கள் 2, டிசம்பர் 2024 12:06:42 PM (IST)
புயல் சேதங்களுக்கு மத்திய அரசு உடனடியாக 1,000 கோடி நிவாரண நிதியை வழங்க வேண்டும் விஜய்வசந்த் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஃபெங்கால் புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அவசர பாதிப்பு குறித்து விவாதிக்க கன்னியாகுமரி எம்.பி விஜய்வசந்த் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர மனு அளித்தார். மேலும் புயலால் உள்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் மனித உயிர்களுக்கு ஏற்பட்டுள்ள விரிவான சேதத்தை எடுத்துரைத்த அவர், உடனடியாக மத்திய அரசு தலையிட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.மேலும் 1,000 கோடி நிவாரண நிதியை அரசு ஒதுக்க வேண்டும் என்றும், சேதங்களை மதிப்பீடு செய்ய நிபுணர் குழுவை அனுப்ப வேண்டும் என்றும் விஜய் வசந்த் வலியுறுத்தியுள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு கருணைத் தொகை வழங்கவும் வலியுறுத்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் புதிய போக்குவரத்து ஆய்வாளர் பேச்சிமுத்து பொறுப்பேற்பு
வியாழன் 25, டிசம்பர் 2025 10:31:06 AM (IST)

கலைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: ஆட்சியர் வழங்கினார்
புதன் 24, டிசம்பர் 2025 12:16:42 PM (IST)

கிறிஸ்துமஸ் விழா: விஜய் வசந்த் எம்பி வாழ்த்து!
புதன் 24, டிசம்பர் 2025 11:49:03 AM (IST)

ஒரே மேடையில் த.வெ.க., காங்கிரஸ் நிர்வாகிகள்: குமரி அரசியலில் பரபரப்பு
புதன் 24, டிசம்பர் 2025 10:47:29 AM (IST)

கிறிஸ்துமஸ், புத்தாண்டு: குமரி மாவட்டத்தில் 1500 போலீசார் பாதுகாப்பு - எஸ்பி தகவல்!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 3:30:52 PM (IST)

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 12:53:41 PM (IST)


.gif)