» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு வாகனம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்

சனி 21, மார்ச் 2026 3:35:38 PM (IST)



கல்வியறிவில் சிறந்த கன்னியாகுமரி மாவட்டம், வாக்குப்பதிவிலும் முதன்மை மாவட்டமாகத் திகழ பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியர் ஆர். அழகுமீனா கேட்டுக்கொண்டார். 

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026-ஐ முன்னிட்டு, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் "தேர்தல் திருவிழா" பிரச்சார வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கல்வியறிவில் சிறந்த கன்னியாகுமரி மாவட்டம், வாக்குப்பதிவிலும் முதன்மை மாவட்டமாகத் திகழ பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டார். கடந்த தேர்தலில் பதிவான 65 சதவீத வாக்குப்பதிவை உயர்த்தி, வரவிருக்கும் ஏப்ரல் 23 தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை எட்டுவதே நோக்கம். 

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மின்னணு வாகனம் மாவட்டத்தின் 6 தொகுதிகளுக்கும் சென்று, புதிய வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் கட்டாயம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும். வாகனத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தையும் ஆட்சியர் தொடங்கி வைத்தார். 

தேர்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு 1950 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்ற தகவல் வாகனத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா. ஜாண் ஜெகத் பிரைட் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory