» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மதுபோதையில் மயங்கிய கேட் கீப்பர்கள்: நடுவழியில் நிறுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில்!
திங்கள் 23, மார்ச் 2026 12:39:34 PM (IST)
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே ரயில்வே கேட் கீப்பர்கள் இருவர் மதுபோதையில் மயங்கிக் கிடந்ததால், பாதுகாப்பு கருதி வந்தே பாரத் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இந்த அதிர்ச்சி சம்பவத்தில் தொடர்புடைய இரு ஊழியர்களும் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில் - சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில், நேற்று முன்தினம் மதியம் 3 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படத் தயாராக இருந்தது. அப்போது, ரயில் நிலைய மேலாளர் பாதையில் உள்ள அனைத்து ரயில்வே கேட் கீப்பர்களையும் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு எச்சரித்தார். ஆனால், நாங்குநேரி ரயில்வே கேட்டில் இருந்த ஊழியர் மட்டும் அழைப்பை ஏற்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள், மற்றொரு ஊழியரை அங்கு அனுப்பிப் பார்க்கச் சொன்னார்கள். அந்த ஊழியர் கேட் கீப்பர் அறைக்குச் சென்று பார்த்தபோது, அங்கு பணியில் இருந்த கேட் கீப்பரும், மற்றொரு ஊழியரும் மதுபோதையில் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதற்கிடையே, ரயில் வள்ளியூர் நிலையத்தை நெருங்கியபோது, நாங்குநேரி கேட் மூடப்படாததால் பாதுகாப்பு கருதி வந்தே பாரத் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. பின்னர், மாற்று ஊழியர் வரவழைக்கப்பட்டு ரயில்வே கேட் மூடப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 10 நிமிட தாமதத்திற்குப் பின் ரயில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.
தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார், போதையில் இருந்த கொம்பையா மற்றும் சிராவன் ஆகிய இருவரையும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். அவர்கள் மது அருந்தியிருந்தது மருத்துவ ரீதியாக உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பணி நேரத்தில் போதையில் இருந்து பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய இரு ஊழியர்களையும், நாகர்கோவில் ரயில்வே பொறியாளர் பிரிவு அதிகாரி உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் முதலமைச்சராகத் தாமதமானதால் தீக்குளித்த விபரீதம் : தவெக நிர்வாகி உயிரிழப்பு!
செவ்வாய் 12, மே 2026 11:50:19 AM (IST)

கழிவு நீக்கம் செய்யப்பட்ட ஈப்பு வாகனம் பொது ஏலம்!
செவ்வாய் 12, மே 2026 10:53:43 AM (IST)

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நலத்திட்ட உதவிகள் கோரி 166 மனுக்கள்!
திங்கள் 11, மே 2026 5:50:53 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சி மேயராக மேரி பிரின்சி லதா பொறுப்பேற்பு: பணிகளைத் தொடங்கினார்!
திங்கள் 11, மே 2026 12:56:39 PM (IST)

பிளஸ் 2 தேர்வில் சாதனை: மாணவிக்கு ஸ்கூட்டர் பரிசளித்த பி.டி. செல்வகுமார்!
திங்கள் 11, மே 2026 12:44:50 PM (IST)

கேரளாவுக்குக் கனிம வளங்கள் கடத்தல் முற்றிலும் நிறுத்தம்: குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் அறிவிப்பு!
சனி 9, மே 2026 4:08:42 PM (IST)


