» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பத்மநாபபுரம் வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு!
செவ்வாய் 24, மார்ச் 2026 4:46:15 PM (IST)

பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களை சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் பிரியங்கா பாசு இங்டி ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களை பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் பிரியங்கா பாசு இங்டி, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் "இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்குச் சாவடிகளில் உறுதி செய்யப்பட வேண்டிய குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் (Assured Minimum Facilities - AMF) முறையாக உள்ளனவா என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
அதன்ஒருபகுதியாக பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவிதாங்கோடு, விலவூர், கோதநல்லூர், குமாரபுரம் ஆகிய பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 50 வாக்குசாவடி மையங்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக வாக்காளர்களுக்குத் தடையின்றி குடிநீர் கிடைப்பதற்கான ஏற்பாடுகள், மின்சாரம் மற்றும் காற்றோட்டம், வாக்குச்சாவடி அறைகளில் போதிய வெளிச்சம் மற்றும் மின்விசிறி வசதிகள், கழிப்பறை வசதி ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியான சுகாதாரமான கழிப்பறை வசதிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் எளிதாக வந்து செல்ல நிலையான சாய்வுதளங்கள் உள்ளிட்ட வசதிகள் மேற்கொண்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
வாக்காளர்கள் எவ்வித சிரமமுமின்றி ஜனநாயகக் கடமையாற்ற அனைத்துத் தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் முதலமைச்சராகத் தாமதமானதால் தீக்குளித்த விபரீதம் : தவெக நிர்வாகி உயிரிழப்பு!
செவ்வாய் 12, மே 2026 11:50:19 AM (IST)

கழிவு நீக்கம் செய்யப்பட்ட ஈப்பு வாகனம் பொது ஏலம்!
செவ்வாய் 12, மே 2026 10:53:43 AM (IST)

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நலத்திட்ட உதவிகள் கோரி 166 மனுக்கள்!
திங்கள் 11, மே 2026 5:50:53 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சி மேயராக மேரி பிரின்சி லதா பொறுப்பேற்பு: பணிகளைத் தொடங்கினார்!
திங்கள் 11, மே 2026 12:56:39 PM (IST)

பிளஸ் 2 தேர்வில் சாதனை: மாணவிக்கு ஸ்கூட்டர் பரிசளித்த பி.டி. செல்வகுமார்!
திங்கள் 11, மே 2026 12:44:50 PM (IST)

கேரளாவுக்குக் கனிம வளங்கள் கடத்தல் முற்றிலும் நிறுத்தம்: குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் அறிவிப்பு!
சனி 9, மே 2026 4:08:42 PM (IST)


