» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தோவாளை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் அழகுமீனா ஆய்வு

சனி 30, நவம்பர் 2024 3:44:51 PM (IST)



தோவாளை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு செய்தார். 

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியம், செண்பகராமன்புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில்: தமிழ்நாடு முதலமைச்சர் கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டப்பணிகளுக்கு நிதிஒதுக்கீடு செய்து, வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. 

அதனடிப்படையில் தோவாளை ஊராட்சி ஒன்றியம், செண்பகராமன்புதூர் ஊராட்சிக்குட்பட்ட யோகீஸ்வரர் காலனியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் ரூ.3.10 இலட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் பணிகளையும், ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தின்கீழ் ரூ.6 இலட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் பல்வேறு பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்தார்.

ஆய்வுகளில் செண்பகராமன் புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயா, சங்கரன் புஷ்ப ரதி, அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory