» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூய்மை பணியாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்க மறுக்கும் ஒப்பந்த நிறுவனம்! ஆட்சியரிடம் மனு!!

திங்கள் 21, அக்டோபர் 2024 3:07:54 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், ஓட்டுநர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை வழங்க மறுக்கும் ஒப்பந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூய்மை பாரத இயக்கம் ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்கள் நலச்சங்கம் நிர்வாகிகள் மாவட்டஆட்சியரிடம் அளித்த மனு: தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் தூய்மைபணியை ஒப்பந்ததாரர் மூலம் செய்து வருகிறது. எந்த ஓய்வுமின்றி தூய்மை பணியாளர்கள் 365 நாளும் ஓய்வில்லாமல் பணிபுரிந்து வருகின்றனர். வழங்கும் கூலி வாழ்க்கை கூலியாக இல்லை. 

தமிழக அரசு தூய்மை பணிக்காக அறிவித்த குறைந்தபட்ச கூலி அரசாணைபடி தூய்மை ஓட்டுனர்களுக்கு ரூ.763/- தூய்மை பணியாளர்களுக்கு ரூ.725/- நாள்கூலி வழங்க வேண்டும் ஒப்பந்ததாரர் வழங்கவில்லை. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களின் தூய்மை தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச கூலி ஆணையின்படி கனரக தூய்மை ஓட்டுனர்களுக்கு ரூ.636/- தூய்மை இலகுரக ஓட்டுநர்களுக்கு ரூ.598/- தூய்மை பணியாளர்களுக்கு ரூ.497/-ம் என அறிவிப்பு செய்துள்ளார். 

இந்த குறைந்தபட்ச ஊதியத்தையும் வழங்காமல் இருப்பது கட்டாய உழைப்பு என்றும் கட்டாய உழைப்பு அரசியல் சாசனத்தால் தடை செய்யபட்டிருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தீர்ப்பு வழங்கி உள்ளது. தொழில்தகராறு சட்டத்தின்படி மாநகராட்சி நிர்வாகம் தூத்துக்குடி முதன்மை வேலை அளிப்பாவராகவும் ஒப்பந்ததாரர் OUR LAND PVT LTD 2வது வேலை அளிப்பவரும் ஆவார்கள். 

இந்த 2 நிர்வாகமும் குறைந்த பட்ச மாவட்ட ஆட்சியர் ஊதியத்தை தூய்மை பணியாளர்களுக்கு சட்டபடி வழங்க நடவடிக்கை எடுக்க மறுத்து வருவதால் பல போராட்டங்கள் தொழிலாளர்கள் மீது திணிக்கபட்டு வருகிறது என்பதை தெரிவித்து கொள்கிறோம். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து மாவட்ட ஆட்சியர் அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை தொழிலாளர்களுக்கு வழங்கவும் தொழிலாளர் உரிமையை பாதுகாக்கவும் தொழில் அமைதியை காக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 



இதனிடையே உரிய ஊதியம், தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்து தூய்மைப் பணியாளர்கள் தூத்துக்குடி மாநகராட்சி முன்பு முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. 


மக்கள் கருத்து

DharmalingamOct 21, 2024 - 09:55:35 PM | Posted IP 162.1*****

ஒரு சில நாட்கள் கூட,அவர்கள் பங்களிப்பு இல்லை என்றால் கூட ஒட்டுமொத்த நகர சுகாதாரமும் நூரி,ஊறி விடும் என்பதை ஆளும் வர்க்கம் உணர்ந்து செயல்பட வேண்டும் .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory