» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தோவாளை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு!

செவ்வாய் 22, அக்டோபர் 2024 12:28:15 PM (IST)



தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியம், பீமாநகரி, சகாயநகர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு அனைத்து தரப்பட்ட மக்களையும் ஒன்றிணைத்து வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்லும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட ஊரக உள்ளாட்சி பகுதிகளில் கிராமப்புற சாலைகள், கலைஞர் கனவு இல்லம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி ஏழை எளிய மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைத்திடும் வகையிலும் ஊராட்சிகளை வளர்ச்சி பெற்ற ஊராட்சியாக மாற்றும் வகையிலும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சகாயநகர் ஊராட்சிக்குட்பட்ட கிறிஸ்து நகர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.11.97 இலட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டிடம் நேரில் பார்வையிட்டு, குழந்தைகளுக்கான அனைத்து அடிப்படை வசதிகள் இருக்கிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

சகாயநகர் வி.கே.ஆர் காம்பவுண்ட தெருவில் ரூ.5.60 இலட்சம் மதிப்பில் பேவர் பிளாக் அமைக்கும் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து பீமாநகரி ஊராட்சிக்குட்பட்ட வெள்ளமடம் அரசு தொடக்கப்பள்ளி முதல் தளத்தில் நமக்குநாமே திட்டத்தின் கீழ் ரூ.20 இலட்சம் மதிப்பில் கூடுதலாக 2 வகுப்பறை கட்டிட பணிகள் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

தற்போது வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் அரசு தொடக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கு காலை உணவு தயாரிப்பதை பார்வையிட்டதோடு, உணவு தரமானதாகவும் சுகாதாரத் தன்மையுடன் உள்ளதா என அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும் உணவு உட்கொள்ளும் மாணவ மாணவர்களுடன் கலந்துரையாடப்பட்டது. 

மேலும் வெள்ளமடம் குளம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் பீமாநகரி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.10 இலட்சம் மதிப்பில் வீடு கட்டப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, தரமானதாக கட்டப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory