» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடிக்கு மேலும் பல வளர்ச்சித் திட்டங்கள் வர உள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி!

சனி 19, அக்டோபர் 2024 3:52:22 PM (IST)



தூத்துக்குடியை வளர்ச்சிப் பாதையை நோக்கி கொண்டு செல்ல இன்னும் பல திட்டங்களை முதல்வர்  செயல்படுத்த உள்ளார் என்று அமைச்சர்  டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சாலையில் புதிதாக கட்டப்பட்டு விரைவில் திறக்கப்பட்வுள்ள டைடல் நியோ பார்க் கட்டிடத்தினை  சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்  பி.கீதாஜீவன்  முன்னிலையில்  தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர்  டி.ஆர்.பி.ராஜா  இன்று (19.10.2024) பார்வையிட்டார்.

இந்த ஆய்வில்  தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர்  டி.ஆர்.பி..ராஜா   தெரிவித்த்தாவது. திராவிட நாயகன்  தமிழ்நாடு முதலமைச்சர்  திராவிட மாடல் நல்லாட்சியில் அனுதினமும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை உறுதி செய்து வருகிறார்கள். அவர்களது முழு நோக்கமே, ஆட்சி பொறுப்பேற்ற காலம் முதல் தொழில் வளர்ச்சி ஒரு பகுதியில் மட்டும் வளர்ச்சியடையாமல் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே. 

அதே சமயத்தில் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் எல்லாப் பகுதிகளிலும் உறுதி செய்ய வேண்டும். கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் வழக்கமாயிற்று. அப்படிப்பட்ட காலகட்டத்தில் பிள்ளைகள் அனைவரும் பெற்றோருக்கு அருகாமையிலேயே சொந்த ஊருக்கு அருகாமையிலேயே பணிபுரிய வேண்டும் என்ற நோக்கத்துடன் டைடல் நியோ என்ற பெயரில் மினி டைடல் பார்க்குகளை தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில்  தமிழ்நாடு முதலமைச்சர்  துவங்கி வைத்தார்கள். 

தூத்துக்குடி டைடல் நியோ பார்க் ஆனது 2022-2023 கால கட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த திட்டம் ஆகும். இத்திட்டத்தின் கட்டுமான பணிகள் 2023 மே மாதம் துவங்கியது. சரியாக 16 மாதங்களில் பணிகள் முழுமையாக முடிவடைந்து வெகு விரைவில்  தமிழ்நாடு முதலமைச்சர்  தூத்துக்குடி டைடல் நியோ பார்கை திறந்து வைக்க உள்ளார்கள். இந்த டைடல் பார்க் 30 கோடி மதிப்பீட்டில் 63,000 சதுர அடி கட்டிடப் பகுதி மற்றும் 51,000 சதுர அடி லீசுடு பகுதியாகவும் கட்டப்பட்டு உள்ளது.

அதனுடைய முதற்கட்ட பணிகளை மேற்பார்வையிடுவதற்காக  சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்  பி.கீதாஜீவன்  அவர்களுடன் ஆய்வு செய்ய வந்தோம். மிகச் சிறப்பாக பணிகள் எல்லாம் நிறைவடைந்து உள்ளது. ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை உறுதி செய்து கொண்டிருக்கும்  தமிழ்நாடு முதலமைச்சர்  குறிப்பாக தென் தமிழகத்துக்கு மிகப்பெரிய வளர்ச்சியை கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் குளோபல் இன்வெஸ்டர்ஸ் மீட் மூலமாகவும் அதன் தொடர்ச்சியாகவும் பல முக்கிய திட்டங்களை தூத்துக்குடிக்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். தூத்துக்குடியை வளர்ச்சிப் பாதையை நோக்கி கொண்டு செல்ல இன்னும் பல திட்டங்களை முதல்வர்  செயல்படுத்த உள்ளார்கள். இன்னும் பன்மடங்கு வளர்ச்சி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வர உள்ளது. இத்திட்டங்களின் மூலம் உள்ளுர் பொருளாதாரம் உயர்ந்து  முதலமைச்சர் அவர்களின் ஒன் ட்ரில்லியன் டாலர் கனவு  சுலபமாக நிறைவேறும். இத்திட்டங்களின் மூலம் நம் பகுதிகளில் உள்ள படித்த இளைஞர்களுக்கு பெருமளவில் வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளார்கள். இளைஞர்கள் மிகவும் பயனடைவர். உப்பளத்திற்கு மத்தியில் ஐடி கம்பெனி வருமா என்று கேட்டவர்கள் மத்தியில் தற்போது வெற்றிகரமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது இந்த டைடல் நியோ பார்க். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தின் எந்த பகுதிக்கு சென்றாலும் அங்கு வளர்ச்சி இருக்கும். தமிழ்நாட்டின் போட்டிகள் அனைத்தும் மற்ற நாடுகளுடன்தான் மாநிலங்களுடன் அல்ல.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட அனைத்து திட்டங்களையும் மேற்பார்வையிட்டு கண்காணிக்க  தமிழ்நாடு முதலமைச்சர்  குழு அமைத்து என்னை அந்தக் குழுவின் தலைவராக நியமித்து பல முக்கிய துறைச் செயலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு ஒப்பந்தங்கள் செய்யப்பட்ட நிறுவனங்கள் பற்றிய அறிக்கைகள் முதல்வர் அவர்களுக்கு மாதந்தோறும் அளிக்கப்பட்டு வருகிறது.  இது விடியல் ஆட்சி,  முதலமைச்சர் அவர்களின் திராவிட மாடல் ஆட்சி, நாங்கள் சொல்வதை நிச்சயம் செய்வோம் எனத் தெரிவித்தார்.
ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர்  க.இளம்பகவத்,   தூத்துக்குடி மாநகராட்சி மேயர்  பெ.ஜெகன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர்  லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)  இரா.ஐஸ்வர்யா, தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர்  செ.ஜெனிட்டா, மாவட்ட வருவாய் அலுவலர்  ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர்  ம.பிரபு, செயற்பொறியாளர் டைடல் பார்க்  பாலாஜி ராஜகுரு, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.   


மக்கள் கருத்து

podhu janamOct 20, 2024 - 10:41:59 AM | Posted IP 172.7*****

Last year Government opened International furniture park and said it provide employment opportunities for approximately 300,000 people, generating revenue of estimated USD 2 billion per year. Can anybody provide outcome now

தம்பிOct 19, 2024 - 08:12:08 PM | Posted IP 162.1*****

நெல்லுக்கு போய் அல்வா கொடு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory