» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்; 3 மணி நேரம் காத்திருந்து படகு பயணம்!

சனி 12, அக்டோபர் 2024 5:50:24 PM (IST)

விடுமுறை தினத்தையொட்டி கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. 

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள்.

இந்நிலையில் இன்று விடுமுறை தினத்தையொட்டி கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. படகு சவாரி செய்ய, சுற்றுலா பயணிகள் சுமார் 2 கி.மீ. தூரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுமார் 3 மணி நேரம் காத்திருந்து படகு பயணம் செய்த சுற்றுலா பயணிகள், முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை, விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளிட்ட இடங்களை கண்டு களித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory