» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பகலில் ஷிப்பிங் கம்பெனியில் கார் டிரைவர்; இரவில் கொள்ளையன்: வாலிபர் கைது!
வெள்ளி 4, அக்டோபர் 2024 8:02:36 AM (IST)
பகலில் ஷிப்பிங் கம்பெனியில் கார் டிரைவர், இரவில் கொள்ளையன் ஆக செயல்பட்டு தமிழக முழுவதும் கைவரிசை காட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாநகரில் அண்மை காலமாக பூட்டி கிடக்கும் வீடுகள் கண்டறியப்பட்டு அவற்றில் கொள்ளை நடப்பது தொடர் கதையாக இருந்து வந்தது. இதைதொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் கொள்ளையர்கள் பிடிக்க தூத்துக்குடி நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பார் மதன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதைத்தொடர்ந்து, இரவு நேர திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்களை போலீசார் தேடி வந்த நிலையில், இன்று அதிகாலையில் மில்லர்புரத்தில் உள்ள நாராயணன் என்பவரது வீட்டில் இருந்து CCTV, பென் டிரைவ், திருடிக்கொண்டு சென்றபோது தனிப்படை போலீசாரிடம் ஓருவர் சிக்கி கொண்டார்.
இதைத்தொடர்ந்து தென்பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவரிடம், போலீசார் நடத்திய விசாரணையில், தூத்துக்குடி ரகுமத்துல்லாபுரத்தைச் மொய்தீன் என்பதும், அவர் தூத்துக்குடி மில்லர்புரத்தில் செயல்பட்டு வரும் ஷிப்பிங் கம்பெனியில் டிரைவராக இருப்பதாகவும், அவரது மனைவி ரேஷ்மா குடியா என்பவரும் அதே ஷிப்பிங் கம்பெனியில் ஊழியராக இருப்பது தெரிய வந்தது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.
மொய்தீன் பகலில் டிரைவராக வேலைக்கு செல்லும் பொழுது பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிடுவதும், இரவில் வீடுகளுக்கு சென்று கொள்ளை அடிப்பதையும் தொடர்கதையாக கொண்டுள்ளார். என்பதும் ஏற்கனவே, கடந்த மாதம் 21 ம் தேதி இரவு டூவிபுரம் 5வது தெருவில்' இரண்டு வீடுகளில் தங்க நகைகளையும் வெள்ளிப்பொருட்களையும், ஜூலை மாதம் 24ம் தேதி மில்லர்புரம் பள்ளிவாசல் தெருவில் ஒரு வீட்டில் தங்க நகைகளையும், ஏப்ரல் மாதம் 9ம் தேதி சிதம்பர நகர் 3வது தெருவில் உள்ள வீட்டில் ரூபாய் 1 லட்சத்தை திருடியை ஒப்புக்கொண்டார்.
மேற்படி வீடுகளில் இருந்து சுமார் 96 கிராம் தங்க பொருட்களையும், 465 கிராம் வெள்ளி பொருட்களையும் திருடியதையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இவர் மீது திருச்சி வேலூர் கோவை மற்றும் கோவில்பட்டி உள்ளிட்ட தமிழக முழுவதும் சுமார் 10 வழக்குகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
ஓOct 4, 2024 - 02:26:17 PM | Posted IP 172.7*****
முகாலய திருட்டு பரம்பரையாக இருக்குமோ
ஒருவன்Oct 4, 2024 - 08:55:35 AM | Posted IP 172.7*****
தயவு செய்து குற்றவாளி முகத்தை காட்டுங்கள் பொதுமக்களுக்கு அடையாளம் தெரியும்படியாக இருக்க வேண்டும்.
TutyOct 4, 2024 - 08:07:45 AM | Posted IP 162.1*****
மர்மநபர்
ஆமாம்Oct 5, 2024 - 01:09:57 PM | Posted IP 172.7*****