» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உ.பி.யில் நீண்ட காலம் முதல்வர் பதவி வகித்தவர் பட்டியலில் ஆதித்யநாத் முதலிடம்

செவ்வாய் 29, ஜூலை 2025 12:51:37 PM (IST)

உத்தர பிரதேசத்​தில் தொடர்ச்​சி​யாக நீண்ட காலம் முதல்​வ​ராக பதவி வகித்​தவர்​கள் பட்​டியலில் யோகி ஆதித்​ய​நாத் முதலிடம் பிடித்​துள்​ளார். 

உத்தர பிரதேசத்​தில் கடந்த 2017-ம் ஆண்டு நடை​பெற்ற சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக வெற்றி பெற்​று, அக்கட்சியின் யோகி ஆதித்​ய​நாத் முதல்​வ​ரா​னார். இதையடுத்து கடந்த 2022-ல் நடை​பெற்ற பேர​வைத் தேர்​தலிலும் 2-வது முறை​யாக வெற்றி பெற்ற கட்சி என்ற பெருமை பாஜக​வுக்கு கிடைத்​தது. இது​போல, யோகி ஆதித்​ய​நாத் 2-வது முறை​யாக முதல்​வ​ரா​னார்.

இந்​நிலை​யில், யோகி ஆதித்​ய​நாத் முதல்​வ​ராக பொறுப்​பேற்று நேற்​றுடன் 8 ஆண்​டு​கள் மற்​றும் 130 நாட்​களை நிறைவு செய்​தார். இதன் மூலம் அம்​மாநிலத்​தில் தொடர்ச்​சி​யாக நீண்ட காலம் முதல்​வ​ராக பதவி வகித்​தவர்​கள் பட்​டியலில் யோகி ஆதித்​ய​நாத் முதலிடம் பிடித்​துள்​ளார்.

இதற்கு முன்பு இந்த சாதனைக்கு சொந்​தக்​கார​ராக இருந்​தவர் கோவிந்த் வல்​லப் பந்த். உத்தர பிரதேசத்​தின் (சுதந்​திரத்​துக்கு பிறகு) முதல் முதலமைச்​ச​ரான அவர், 8 ஆண்​டு​கள் 127 நாட்​கள் தொடர்ந்து முதல்​வ​ராக பதவி வகித்​துள்​ளார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory