» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

குழந்தைகளும், முதியவர்களும் ரேபிஸ் நோய்க்கு இரையாகி வருகின்றனர்: உச்சநீதிமன்றம் கவலை

திங்கள் 28, ஜூலை 2025 5:17:23 PM (IST)

நாய் கடியால் குழந்தைகளும், முதியவர்களும் ரேபிஸ் நோய்க்கு இரையாகி வருகின்றனர் என  உச்சநீதிமன்றம்  கவலை தெரிவித்துள்ளது.

நாய் கடியால் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்படும் சம்பவங்கள் தொடர்பாக ஊடங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் இன்று தாமாக முன்வந்து வழக்கு விசாரணை நடத்தியது. இந்த வழக்கு நீதிபதி பர்திவாலா, நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "ஒவ்வொரு நாளும், டெல்லியிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகி வருகின்றன, இது ரேபிஸ் நோய் பாதிப்புக்கு வழிவகுக்கிறது. குழந்தைகளும், முதியவர்களும் இந்த கொடூரமான நோய்க்கு இரையாகி வருகின்றனர்.

இந்த விவகாரம் மிகவும் அச்சுறுத்தக்கூடியது; ஆபத்தானது. இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்க உச்சநீதிமன்றம்  தலைமை நீதிபதி அமர்வு முன்பு, இந்த வழக்கு தொடர்பான விவரங்கள் மற்றும் செய்தி அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory