» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நண்பர்களுடன் பேட்மிண்டன் விளையாடியபோது மாரடைப்பால் இளைஞர் திடீர் மரணம்...!

திங்கள் 28, ஜூலை 2025 5:20:08 PM (IST)



ஐதராபாத்தில் நண்பர்களுடன் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த போதே மாரடைப்பு ஏற்பட்டு 25 வயது இளைஞர் இறந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

இன்றைய காலகட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போதும், நடனமாடிக் கொண்டிருக்கும்போதும் திடீரென மாரடைப்பால் ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. அதுவும் இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியடையச் செய்கிறது. அதுபோன்றதொரு சம்பவம் ஐதராபாத்தில் நடந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 25 வயதான ராகேஷ் என்ற இளைஞர் நண்பர்களுடன் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தார். உடலில் எந்த பிரச்சினையும் ஏற்படாத நிலையில், சிறப்பாக விளையாடி வந்த ராகேஷ், திடீரென சரிந்து விழுந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள், உடனடியாக ராகேஷை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ராகேஷ் விளையாடிய போது மாரடைப்பு ஏற்பட்டு கிழே விழும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory