» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்து, பௌத்தர், சீக்கியர்களை தவிர பிறரின் எஸ்சி சாதி சான்றிதழ் ரத்து : பட்னாவிஸ் அறிவிப்பு!
வெள்ளி 18, ஜூலை 2025 11:58:31 AM (IST)
மகாராஷ்டிராவில் இந்து, பௌத்தம், சீக்கியம் ஆகிய மதங்களைத் தவிர வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் பட்டியல் சாதி (SC) சான்றிதழ் பெற்றிருந்தால், அவை ரத்து செய்யப்படும் என முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
அத்தகைய சான்றிதழ்கள் மூலம் அரசு வேலைகள் அல்லது ஆதாயங்கள் பெற்றிருந்தால், அவை செல்லாததாக்கப்படும் என்றும், பணப் பலன்கள் இருந்தால் அவை வசூலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.பட்டியல் சாதி இடஒதுக்கீடு இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் சீக்கியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்ற உச்ச நீதிமன்றத்தின் 2024 தீர்ப்பை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், கட்டாய மதமாற்றங்களைத் தடுக்க வலுவான சட்ட விதிகள் கொண்டு வரப்படும் என்றும் பட்னாவிஸ் கூறினார். வரும் குளிர்கால கூட்டத்தொடரில் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக மக்கள் ஸ்டாலினுக்கு மீண்டும் ஒருமுறை வெற்றியைப் பரிசளிப்பார்கள்: கெஜ்ரிவால் நம்பிக்கை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 11:45:23 AM (IST)

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம்: இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்பாடு 12.8% சரிவு!
திங்கள் 20, ஏப்ரல் 2026 10:55:14 AM (IST)

ஹார்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு – மத்திய அரசு கடும் கண்டனம்!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:34:00 AM (IST)

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு: அமைச்சரவை ஒப்புதல்
சனி 18, ஏப்ரல் 2026 5:27:06 PM (IST)

இண்டியா கூட்டணி எதிர்ப்பு எதிரொலி: மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான மசோதா தோல்வி
சனி 18, ஏப்ரல் 2026 10:45:21 AM (IST)

தென் மாநிலங்களை அதிகாரமற்றதாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 4:36:14 PM (IST)

