» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நீதித்துறை பணிக்கு 3 ஆண்டு கால பணி அனுபவம் கட்டாயம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

செவ்வாய் 20, மே 2025 4:04:43 PM (IST)

நீதிபதியாக பணியாற்ற, குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றி இருக்க வேண்டும்'' என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம்  இன்று வெளியிட்ட தீர்ப்பு ஒன்றில், முன்சீப், மாஜிஸ்திரேட் போன்ற நீதித்துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க 3 ஆண்டு வழக்கறிஞர் அனுபவம் கட்டாயம் என தெரிவித்து உள்ளது. 2002-ம் ஆண்டில் இந்த விதியில் தளர்வு அறிவிக்கப்பட்டது. இந்த தளர்வின்படி, புதிதாக சட்டப்படிப்பு படித்தவர்களும் இந்த பதவிகளுக்கு போட்டியிடலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அப்போது, புதிதாக பணியில் சேர்பவர்களுக்கு குறைந்தபட்சம் ஓராண்டு சிறந்த பயிற்சி வழங்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. 3 ஆண்டு கால அனுபவம் என்பது தடையாக இருக்கும் என பார்க்கப்பட்டது. இந்நிலையில், இந்த தளர்வு திருத்தி அறிவிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இதுபற்றிய வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில், நீதிபதிகள் ஏ.ஜி. மசீ மற்றும் கே. வினோத் சந்திரன் உள்ளிட்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதி துறை திறமையாக செயல்படுவதற்கு சட்ட அனுபவம் அவசியம் என கோர்ட்டு தெரிவித்தது.

இதன்படி, வழக்கறிஞராக பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து, 3 ஆண்டு அனுபவ காலம் தொடங்கும். 10 வருடம் வழக்கறிஞராக இருந்த ஒருவரிடம் இருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். நீதி துறை அதிகாரி ஒருவரின் கையொப்பம் ஆகியன அனுபவத்திற்கான சான்றாக ஏற்று கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory