» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒத்துழைக்காவிட்டால் அமெரிக்கா விலகிவிடும்
வியாழன் 24, ஏப்ரல் 2025 11:56:08 AM (IST)

போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு உக்ரைனும், ரஷ்யாவும் ஒத்துழைக்காவிட்டால் அதற்கான முயற்சியில் இருந்து அமெரிக்கா விலகி விடும் என அந்நாட்டு துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் எச்சரித்துள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் உக்ரைன் – ரஷ்யா போருக்கு தீர்வு காண அமெரிக்கா தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக போர் நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தை மாஸ்கோவில் நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் உக்ரைன், பிரான்ஸ் நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் பேச்சுவார்த்தை தொடர்பான திட்டமிடலில் சிக்கல் எழுந்ததால் அதில் தங்களால் பங்கேற்க முடியாது என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடைசி நேரத்தில் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், ஆக்ராவில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
உக்ரைன் போரை நிறுத்த ஆக்கபூர்வமான திட்டத்தை அமெரிக்கா முன்வைத்துள்ளதாகவும், அதனை அவர்கள் ஏற்காவிட்டால் அமைதிக்கான முயற்சியில் இருந்து நாங்கள் வெளியேறி விடுவோம் என்றும் தெரிவித்தார். காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக அவர் கூறினார். பெஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நேரத்தில் இந்தியாவிற்கு துணை நிற்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது சீனா மத்தியஸ்தம்? பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி
வியாழன் 1, ஜனவரி 2026 11:24:39 AM (IST)

அதிரடியாக உயர்ந்த இந்திய பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
புதன் 31, டிசம்பர் 2025 8:43:39 PM (IST)

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை யாராலும் தடுக்க முடியாது: தர்மேந்திர பிரதான்
புதன் 31, டிசம்பர் 2025 12:11:35 PM (IST)

கட்டுப்பாட்டை இழந்து அரசுப்பேருந்து மோதி 4 பேர் உயிரிழப்பு: மும்பையில் சோகம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 12:26:02 PM (IST)

இளைஞர் வயிற்றில் இரும்பு ஸ்பேனர்கள் : அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 11:59:28 AM (IST)

டெல்லியில் கடும் பனிமூட்டம்: 118 விமானங்கள் ரத்து
செவ்வாய் 30, டிசம்பர் 2025 11:57:11 AM (IST)



.gif)