» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாட்டின் வளர்ச்சிக்காக பாஜக அரசு உழைத்து வருகிறது: பிரதமர் மோடி பேச்சு

சனி 16, நவம்பர் 2024 3:58:19 PM (IST)

"ஓட்டு வங்கி அரசியலில் இருந்து விலகி, நாட்டின் வளர்ச்சிக்காக பாஜக அரசு உழைத்து வருகிறது" என பிரதமர் மோடி தெரிவித்தார்.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: உலக நாடுகளில் ஒவ்வொரு தேர்தலின் போதும் ஆட்சிகள் மாறுகின்றன. இந்திய மக்கள் 3-வது முறையாக பா.ஜ.க, அரசை தேர்ந்து எடுத்துள்ளனர். இதற்கு முன்பு தேர்தல் வெற்றிக்காகவே அரசுகள் இருந்தன. பா.ஜ.க. ஆட்சியில் மக்கள் நம்பிக்கையை மீட்டெடுத்துள்ளோம். மக்களின் வளர்ச்சியே அரசின் தாரக மந்திரம். 

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதையே எங்களது அரசு நோக்கமாக கொண்டுள்ளது. மக்கள் தங்கள் நம்பிக்கையை எங்களிடம் ஒப்படைத்துள்ளனர். முந்தைய காலத்தில் பயங்கரவாதம் மக்களை பாதுகாப்பற்றதாக உணர வைத்தது. இப்போது காலம் மாறிவிட்டது. பயங்கரவாதிகள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள். தனது அரசு ஓட்டு வங்கி அரசியலில் இருந்து விலகி, நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory