» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அதிகாரத்தை பிறப்புரிமையாக கருதுபவர்கள் 10 ஆண்டுகளாக அதிகாரத்தில் இல்லை: பிரதமர் மோடி
சனி 30, நவம்பர் 2024 12:43:28 PM (IST)
அதிகாரத்தை தங்கள் பிறப்புரிமையாக கருதுபவர்கள், கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் அதிகாரத்தில் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது;- "மக்களை தவறாக வழிநடத்தி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் ஒரே லட்சியம். அவர்கள் ஜனநாயகத்தின் நெறிமுறைகளை நிராகரித்து, அரசியலமைப்பை சீர்குலைத்தனர். அதிகாரத்தை தங்கள் பிறப்புரிமையாக கருதுபவர்கள், கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் அதிகாரத்தில் இல்லை.அரசியல் கட்சிகளிடையே கொள்கை ரீதியான வேறுபாடுகள் இருப்பது சகஜம்தான். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது அரசியலின் நிறம் வேறு மாதிரியாக இருந்தது. ஜனநாயக நாட்டில் ஆக்கபூர்வமான எதிர்ப்புகள் இருப்பது ஆரோக்கியமானது. ஆனால் இப்போது எதிர்ப்புகளை தெரிவிக்கும் விதம் மிகப்பெரிய அளவில் மாறிவிட்டது. மக்கள் பா.ஜ.க.வை தேர்ந்தெடுத்து விட்டார்கள் என்பதை எதிர்க்கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக அதிகாரம் மறுக்கப்பட்டுள்ளதால், பொய்களையும், வதந்திகளையும் பரப்பி மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர். இதுபோன்ற முயற்சிகளை முறியடித்து, பொய்களை அம்பலப்படுத்த நாட்டை நேசிப்பவர்களும், அரசியலமைப்பை மதிப்பவர்களும் அதிக விழிப்புடன் செயல்பட வேண்டும்." இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு முன் 2 முறை சரிபார்க்கவும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
சனி 29, ஆகஸ்ட் 2026 5:29:42 PM (IST)

அன்பையும், நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் ரக்ஷா பந்தன் : பிரதமர் மோடி வாழ்த்து
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 11:38:17 AM (IST)

பான் மசாலா விளம்பர விவகாரம்: ஷாருக் கான் உள்பட 3 பாலிவுட் நடிகர்களுக்கு எஃப்டிஏ கெடு!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:18:56 PM (IST)

ஆந்திராவில் கோர விபத்து: ஆட்டோ மீது பஸ் மோதி 7 பேர் பலி; 4 குழந்தைகள் உள்பட 8பேர் படுகாயம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:05:07 PM (IST)

கேரளாவின் பெயர் அதிகாரப்பூர்வமாக மாற்றம்: உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியீடு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:01:24 PM (IST)

இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் மு.க.ஸ்டாலின் - சி.ஜே.பி. தலைவர் பேட்டி!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:28:06 PM (IST)


