» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக நியமனம்: உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
திங்கள் 2, டிசம்பர் 2024 4:14:07 PM (IST)
பணமோசடி வழக்கில் ஜாமீன் பெற்ற செந்தில் பாலாஜி, உடனடியாக தமிழகத்தின் மூத்த கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், செந்தில் பாலாஜியால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான வித்யா குமார் என்பவர், செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீன் உத்தரவை திரும்பப் பெறக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.எஸ். ஓகா தலைமையிலான அமர்வு, "இது என்ன? அவர் (செந்தில் பாலாஜி) மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர் உடனடியாக அமைச்சராகி இருக்கிறார். இது நிறுத்தப்பட வேண்டும். சாட்சிகள் அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்தை இப்போது நியாயப்படுத்துவார்கள். நீதி வழங்குவது மட்டும் அல்ல, அது வெளிப்படையாக செய்யப்பட வேண்டும் என்பதே அடிப்படைக் கொள்கை.” எனக் குறிப்பிட்டது.
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டபோது அளிக்கப்பட்ட தீர்ப்பில், தண்டனையின் ஒரு வடிவமாக சுதந்திரத்தை தடுக்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி ஓகா, செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டது பற்றி மட்டுமே இப்போது கவனம் செலுத்தப்படும் என தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த்த லுத்ராவிடம் கூறினார்.
மேலும், "இந்த வழக்கில் வழக்கமான நோட்டீஸ் அனுப்பப்பட மாட்டாது. மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள இப்போது சாட்சிகள் கேபினட் அமைச்சரை எதிர்க்கும் மனநிலையில் இருக்க மாட்டார்கள் என்ற குற்றச்சாட்டை விசாரிக்கும். இந்த வழக்கு டிசம்பர் 13-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.” என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவா உள்பட 3 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்
திங்கள் 14, ஜூலை 2025 4:54:19 PM (IST)

நிமிஷா விவகாரத்தில் எல்லைக்கு மீறி எதுவும் செய்ய முடியவில்லை: மத்திய அரசு தகவல்
திங்கள் 14, ஜூலை 2025 4:46:38 PM (IST)

டெல்லியில் மாயமான பல்கலைக்கழக மாணவி யமுனை ஆற்றில் சடலமாக மீட்பு!
திங்கள் 14, ஜூலை 2025 11:36:00 AM (IST)

நாம் அதிக சமத்துவத்தை நோக்கி முன்னேறி வருகிறோம்: பிரதமர் மோடி பெருமிதம்
ஞாயிறு 13, ஜூலை 2025 6:47:17 PM (IST)

இலவச ஐபிஎல் டிக்கெட்டுகள் கேட்டு மிரட்டல் ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் கைது!
சனி 12, ஜூலை 2025 5:50:59 PM (IST)

ஏர் இந்தியா என்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!
சனி 12, ஜூலை 2025 10:17:14 AM (IST)

sankarDec 3, 2024 - 10:24:24 PM | Posted IP 162.1*****