» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)
இந்தியாவில் முதன்முறையாக அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதிக்கும் மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவில் முதன்முறையாக தனியார் நிறுவனங்கள் அணுமின் நிலையங்களைத் தொடங்க அனுமதிக்கும் 'SHANTHI' மசோதா புதன்கிழமை மக்களவையில் நிறைவேறிய நிலையில் நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலுக்கு பிறகு இந்த மசோதா சட்டமாகும்.இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 'SHANTI' மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது, நமது தொழில்நுட்பத் துறைக்கு ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் தருணமாகும்.
இந்த மசோதா நிறைவேற ஆதரவளித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எனது நன்றிகள். செயற்கை நுண்ணறிவுக்கு ஊக்கமளிப்பது முதல் பசுமை உற்பத்திக்கு வழிவகுப்பது வரை, இது நாட்டிற்கும் உலகிற்கும் ஒரு தூய்மையான எரிசக்தி எதிர்காலத்திற்குத் தீர்க்கமான உந்துதலை அளிக்கிறது.
இது தனியார் துறைக்கும் நமது இளைஞர்களுக்கும் ஏராளமான வாய்ப்புகளையும் திறந்துவிடுகிறது. இந்தியாவில் முதலீடு செய்வதற்கும், புதுமைகளைப் படைப்பதற்கும், கட்டமைப்பதற்கும் இதுவே மிகச் சரியான நேரம்!" என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே எதிர்க்கட்சி எம்.பிக்கள், அணுசக்தி துறையை தனியார்மயமயக்குவதற்கு கவலை தெரிவித்தனர்.
நேற்று மாநிலங்களவையில் மசோதா மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சி எம்.பிக்கள், அணுசக்தி துறையை தனியார்மயமயக்குவதற்கு கவலை தெரிவித்தனர்.இருப்பினும், தனது உரையில், அணுசக்தி அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்த மசோதா நாட்டின் அணுசக்தித் துறையில் பெரும் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் என்று கூறினார்.
காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், இந்தியாவில் அணுசக்தியின் வளமான வரலாறு 2014க்கு பல தசாப்தங்களுக்கு முன்பே தொடங்கியது என்று சுட்டிக்காட்டினார். அறிவியல் உட்பட அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பாஜக ஆட்சிக்கு வந்த 2014 இல் தொடங்கியது என்று இப்போது நமக்கு பொய் சொல்லப்படுகிறது என தெரிவித்தார்.
திமுக எம்பி வில்சன், பாதுகாப்பு போன்ற கடுமையான பிரச்சினைகளை இந்த மசோதா கையாளவில்லை என்றும், காலநிலை மாற்றத்திற்கு மத்தியில் அணுசக்தி நிறுவல்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தார்.
பிஆர்எஸ் எம்பி சுரேஷ் ரெட்டி, பாதுகாப்பு குறித்த கவலைகளைப் எழுப்பி, மசோதாவை தேர்வுக் குழுவிற்கு பரிந்துரைக்க வேண்டும் அல்லது சுற்றுச்சூழல் குழுவின் நிலையான மேற்பார்வையில் வைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
அணுசக்தி விநியோகஸ்தர்களுக்கு பயனளிக்கும் வகையில் இதுபோன்ற மசோதா அறிமுகப்படுத்தப்பட்டதாக சிபிஐ(எம்) நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ. ரஹீம் குற்றம் சாட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)

மசோதாக்களுக்கு தமிழில் பெயர் வைக்காதது ஏன்? - கனிமொழி எம்.பி. கேள்வி
வியாழன் 18, டிசம்பர் 2025 3:51:31 PM (IST)


.gif)