» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பனிக்காலங்களில் கிரிக்கெட் போட்டிகளை தென் இந்தியாவில் நடத்தலாம்: சசிதரூர் யோசனை

வியாழன் 18, டிசம்பர் 2025 3:46:32 PM (IST)



பனிக்காலங்களில் தென்னிந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த திட்டமிடலாம் என்று சசிதரூர் யோசனை தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதற்கிடையே, நேற்று லக்னோவில் இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது டி20 போட்டி நடைபெற இருந்தது. ஆனால், போதிய வெளிச்சமின்மை மற்றும் அதிகப்படியான பனிமூட்டம் காரணமாக அந்த போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

கடும் பனிமூட்டம் காரணமாக டி20 போட்டி ரத்துசெய்யப்பட்ட நிலையில், வட மாநிலங்களில் பனிமூட்டம் நிறைந்த காலங்களில் கிரிக்கெட் போட்டியை தென்னிந்தியாவில் நடத்தலாம் என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் யோசனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வட இந்தியா முழுவதும் மூடுபனி இருப்பதால் இங்கு கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது என்பது சாத்தியமற்றதாகிவிடும். 

இந்தக் காலகட்டத்தில், தென்னிந்தியாவில் போட்டிகளை திட்டமிடலாம். தென்னிந்தியாவிற்கு வந்து விளையாடலாம். அங்கு காற்று மாசு பிரச்னையும் இல்லை, பார்வைத் திறன் தொடர்பான பிரச்னையும் இல்லை. ரசிகர்களும் போட்டியை கண்டு மகிழலாம். போட்டிகளை பிசிசிஐ திட்டமிடுவதற்கு முன்பு வானிலை நிலவரங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.”இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory