» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தங்க நகையின் மதிப்பில் 60 முதல் 65% வரை மட்டுமே கடன்: ரிசர்வ் வங்கி அதிரடி!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 11:24:15 AM (IST)
தங்க நகையின் மதிப்பில் 60 முதல் 65 சதவீதம் வரையிலான அளவுக்கு மட்டுமே வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது, நகைகள் அடகு வைக்கும்போது தங்கத்தின் மதிப்பில் 70 முதல் 72 சதவீதம் வரையிலான அளவுக்கு கடன் வழங்கப்படுகிறது. தங்கம் விலை திடீரென ராக்கெட் வேகத்தில் உயர்வதும், பின்னர் லேசாக குறைவதுமாக உள்ளது. பொதுமக்கள் தங்களுடைய பல்வேறு வகையான நிதி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கைவசம் உள்ள நகைகளை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அடகு வைத்து கடன் வாங்கி வருகிறார்கள்.
வங்கிகளில் நகையை அடகு வைத்து வாங்கப்பட்ட கடன் தொகை கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.1.10 லட்சம் கோடியாக இருந்தது. இது கடந்த அக்டோபர் மாதம் ரூ.3.37 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதில் 40 முதல் 45 சதவீதம் அளவிலான நகைக்கடனை 31 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் வாங்கி இருக்கிறார்கள்.
தங்கத்தின் விலை வீழ்ச்சியடையும்போது, வாங்கிய கடன் தொகையானது அடகு வைக்கப்படும் நகையின் மதிப்பை விடவும் அதிகமாக இருக்கிறது. இதுபோன்ற சமயங்களில் நகை கடனை திருப்பி செலுத்துவதில் பெரும்பாலானோர் ஆர்வம் செலுத்துவதில்லை. மேலும் நகையை திருப்பாமல், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிடுகிறார்கள்.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்து இருந்தது. நகைக்கடன் மீதான இடர் மேலாண்மை அதிகரித்துள்ளதால் தங்க நகைகளின் மீது வழங்கப்படும் கடனில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது, நகைகள் அடகு வைக்கும்போது தங்கத்தின் மதிப்பில் 70 முதல் 72 சதவீதம் வரையிலான அளவுக்கு கடன் வழங்கப்படுகிறது. இந்த சூழலில் தங்க நகையின் மதிப்பில் இருந்து 60 முதல் 65 சதவீதம் வரையிலான அளவுக்கு மட்டுமே கடன் வழங்குவதற்கு வங்கிகள், நிதி நிறுவனங்கள் முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி : பிரதமர் மோடி பெருமிதம்
திங்கள் 22, டிசம்பர் 2025 12:35:30 PM (IST)

நாடு முழுவதும் ரயில் கட்டணம் உயர்வு : டிசம்பர் 26ஆம் தேதி முதல் அமல்!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:33:37 AM (IST)

அணுசக்தித் துறையில் தனியார்: மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:17:30 AM (IST)

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)


.gif)