» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அமெரிக்காவை திருப்திப்படுத்தவே இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு: பினராயி விஜயன்

திங்கள் 21, அக்டோபர் 2024 5:46:15 PM (IST)

அமெரிக்காவை திருப்திப்படுத்தவே, இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து வருவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினரிடையே கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போர் நடந்து வருகிறது. இருதரப்பினரும் சரமாரியாக தாக்குதல் நடத்தி கொண்டதில், ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்த போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து வரும் கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய அரசின் நடுநிலையையும் விமர்சித்துள்ளார்.

கண்ணனூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது:ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான நாடுகள், இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அமெரிக்கா போன்ற ஒரு சில நாடுகளே இதனை எதிர்க்கின்றன. இதில், இந்தியாவின் நிலைப்பாடு என்ன? சிறந்த வரலாறு கொண்ட இந்தியா எங்கே உள்ளது? 

ஓட்டெடுப்பை தவிர்த்ததன் மூலம் பாலஸ்தீனத்திற்கு எதிரான தாக்குதலை நிறுத்த வலியுறுத்தவில்லை. மாறாக, இஸ்ரேல் பக்கம் நிற்பதை தான் உணர்த்துகிறது. இத்தாலி போன்ற நாடுகள் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் விநியோகத்தை நிறுத்தி விட்டன. ஆனால், இந்தியா தொடர்ந்து விற்பனை செய்து வருகிறது என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory