» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேரளாவில் துணை ஆட்சியர் தற்கொலை!

செவ்வாய் 15, அக்டோபர் 2024 9:04:30 PM (IST)

கேரளாவில் துணை ஆட்சியர் திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா கண்ணனூர் மாவட்டத்தில் துணைக் ஆட்சியராக பணியாற்றி வந்தவர் நவீன் பாபு. இவருக்கு சமீபத்தில் பதவி உயர்வு மற்றும் பணியிடமாறுதல் வழங்கப்பட்டது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் அவர் பணியில் சென்று சேருவதை முன்னிட்டு, கண்ணனூர் மாவட்டத்தில் அவரது நிர்வாகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பிரிவு உபசார விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

விழாவில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அழைப்பு இல்லாமலேயே வந்து பங்கேற்ற மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் திவ்யா, துணை ஆட்சியர் நவீன் பாபு மீது தாறுமாறான குற்றச்சாட்டுகளை கூறினார். பலர் முன்னிலையில் இப்படி நடந்து கொண்டதால் நவீன் பாபு மனம் உடைந்து போனார். 

இந்நிலையில், இன்று (அக்.,15) நவீன் பாபு அவரது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஞ்சாயத்து தலைவர் திவ்யா பேசியதால், மனம் உடைந்த நவீன் தற்கொலை செய்து கொண்டதாக, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory