» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இனி கீழமை நீதிமன்றம் அல்ல; விசாரணை நீதிமன்றம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

சனி 10, பிப்ரவரி 2024 4:18:17 PM (IST)

விசாரணை நீதிமன்றங்களை, கீழமை நீதிமன்றங்கள் என்று குறிப்பிடுவதை தவிர்க்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றங்களுக்கு இடையேயான எந்தவொரு தகவல் தொடர்புகளிலும், கோப்புகளிலும், குறிப்பிலும் "டிரையல் கோர்ட்ஸ்" (Trial Courts) எனும் விசாரணை நீதிமன்றங்களை, "கீழ்/கீழமை நீதிமன்றங்கள்" (Lower Courts) என்று குறிப்பிடுவதை தவிர்க்குமாறு உச்ச நீதிமன்றம், தனது பதிவாளர் அலுவலகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

ஒரு கொலை வழக்கில், குற்றவாளிகள் தாக்கல் செய்த குற்றவியல் மேல்முறையீட்டை விசாரிக்கும் போது, நீதிபதிகள் அபய் ஓகா (Abhay Oka) மற்றும் உஜ்ஜல் புயான் (Ujjal Bhuyan) ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.

அந்த உத்தரவில் தெரிவித்ததாவது: இந்த நீதிமன்றத்தின் பதிவாளர் அலுவலகம், இனி, விசாரணை நீதிமன்றங்களை, "லோயர் கோர்ட்ஸ்" என குறிப்பிடுவதை நிறுத்தினால் பொருத்தமானதாக இருக்கும்."விசாரணை நீதிமன்ற பதிவுகள்" (Trial Court Record) என்பதயும் "கீழ்/கீழமை நீதிமன்ற பதிவுகள்" (Lower Court Record) என்று குறிப்பிடக்கூடாது.

நீதிமன்ற பதிவாளர் இந்த உத்தரவை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த உத்தரவின் நகல் அவருக்கு அனுப்பப்பட வேண்டும்.இவ்வாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2022 நவம்பர் மாதம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி (Chief Justice of India) சந்திரசூட், "துணை நீதிமன்றங்கள்" என அழைப்பது தவறு; அவை "மாவட்ட நீதிமன்றங்கள்" என அழைக்கப்பட வேண்டும் என்றும் இந்த நீதிமன்றங்கள் அனைத்தும் நீதி பரிபாலன அமைப்பில் ஒருங்கிணைந்த பங்கை கொண்டுள்ளவை என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

"மாவட்ட நீதித்துறை" குறித்து குறிப்பிடும் போது, "கீழ்/கீழமை நீதித்துறை" என்று கூறும் போக்கை உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் நிறுத்தி கொண்டு, இது குறித்து தங்கள் மனநிலையை அவர்கள் மாற்றி கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory