» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஒரு ரன்னில் அயர்லாந்திடம் தோல்வி: தொடரை இழந்தது இந்திய அணி!
திங்கள் 29, ஜூன் 2026 12:33:39 PM (IST)
அயர்லாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 0-2 என்ற கணக்கில் இந்திய அணி பறிகொடுத்துள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து 14 இருதரப்புத் தொடர்களில் தோல்வியே சந்திக்காமல் இருந்த இந்திய அணியின் சாதனைப் பயணம் இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.
2020 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணி இழக்கும் மூன்றாவது இருதரப்பு டி20 தொடர் இதுவாகும். இதற்கு முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி இழந்திருந்தது.
அப்போது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோற்று 0-2 எனப் பின்தங்கிய இந்தியா, அடுத்த 2 போட்டிகளில் வென்று 2-2 எனத் தொடரைச் சமன் செய்தது. ஆனால், அமெரிக்காவின் லாடர்ஹில் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா நிர்ணயித்த 165 ரன்கள் இலக்கை வெஸ்ட் இண்டீஸ் அணி எளிதாக எட்டி, 3-2 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்குப் பிறகு சுமார் 3 ஆண்டுகள் கழித்து தற்போது அயர்லாந்து மண்ணில் இந்திய அணி டி20 தொடரை இழந்துள்ளது. பெல்ஃபாஸ்டில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் மட்டுமே எடுத்து, 1 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. அயர்லாந்து அணியின் பந்துவீச்சாளர் ஜெய் முந்த்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் சரிவுக்குக் காரணமானார். இந்தத் தோல்வி இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கார்டிப் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி : தொடரை சமன் செய்தது இங்கிலாந்து!
வெள்ளி 17, ஜூலை 2026 12:00:27 PM (IST)

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமைப்பில் மாற்றம்: ஐசிசி வருடாந்திர கூட்டத்தில் முடிவு!
வியாழன் 16, ஜூலை 2026 4:37:54 PM (IST)

பிரான்ஸை 2-0 கணக்கில் வீழ்த்தியது ஸ்பெயின்: உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்குத் தகுதி!
புதன் 15, ஜூலை 2026 12:46:04 PM (IST)

அக்ஷர் அசத்தல்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி!
புதன் 15, ஜூலை 2026 8:53:59 AM (IST)

18 ஆண்டுகால பயணம் முடிவு: சிஎஸ்கே தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் விலகல்!
திங்கள் 13, ஜூலை 2026 12:26:07 PM (IST)

உலகக் கோப்பையில் ஸ்பெயின் வரலாற்றுச் சாதனை : பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது!
சனி 11, ஜூலை 2026 12:29:27 PM (IST)


