» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சிஎஸ்கே-வில் சஞ்சு சாம்சன்: 11-ஆம் எண் ஜெர்சியுடன் களமிறங்குகிறார்!
வியாழன் 19, மார்ச் 2026 5:17:25 PM (IST)
ஐபிஎல் 2026 சீசனில் முதல்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக விளையாட உள்ள நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுக்கு, அவர் விரும்பிய 11-ம் எண் ஜெர்சி வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில், கடைசி மூன்று போட்டிகளில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் சஞ்சு சாம்சன். அந்தத் தொடரில் 'தொடர் நாயகன்' (Player of the Tournament) விருது வென்று அசத்திய அவர், இப்போது அதே ஃபார்முடன் சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளார்.ஐபிஎல் வரலாற்றில் நீண்ட காலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தூணாக விளங்கிய சஞ்சு சாம்சன், இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது சென்னை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய போது அணிந்த அதே 11-ம் எண் ஜெர்சியையே இப்போதும் சென்னை அணி அவருக்கு வழங்கியுள்ளது. சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடும் போது அவர் 9-ம் எண் ஜெர்சியைப் பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சென்னை வந்துள்ள சஞ்சு சாம்சன், சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே வீரர்களுடன் இணைந்து தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். 'யெல்லோ ஆர்மி' உடையில் சஞ்சு சாம்சனைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாநில கால்பந்து போட்டி: சென்னையை வீழ்த்தி காயல்பட்டினம் அணி அரையிறுதிக்கு தகுதி!
திங்கள் 25, மே 2026 8:50:39 AM (IST)

அகில இந்திய ஹாக்கி: ஜலந்தர், மும்பை அணிகள் வெற்றி!
திங்கள் 25, மே 2026 8:22:12 AM (IST)

மும்பையை வீழ்த்தி பிளே-ஆஃப் சுற்றிற்குள் நுழைந்தது ராஜஸ்தான்! – பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் அணிகள் வெளியேற்றம்!
ஞாயிறு 24, மே 2026 8:58:42 PM (IST)

சென்னை அணி மீண்டும் கம்பீரமாக வலம் வரும் ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!
வெள்ளி 22, மே 2026 5:15:04 PM (IST)

வைபவ் சூர்யவன்ஷி அதிரடி: லக்னோவை வீழ்த்தி பிளே-ஆப் வாய்ப்பைத் தக்கவைத்தது ராஜஸ்தான்!
புதன் 20, மே 2026 5:15:00 PM (IST)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது ஹைதராபாத்!
செவ்வாய் 19, மே 2026 10:55:16 AM (IST)


