» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்த காவ்யா மாறன்: சமூக வலைதளங்களில் எதிர்ப்பு!
வெள்ளி 13, மார்ச் 2026 12:28:11 PM (IST)

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 'தி ஹண்ட்ரட்' கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில், பாகிஸ்தான் வீரரை சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் வாங்கியதைத் தொடர்ந்து பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
சன் குழுமத்திற்குச் சொந்தமான 'சன்ரைசர்ஸ் லீட்ஸ்' (முன்னர் நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ்) அணி, பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை சுமார் 2.35 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம், இந்திய உரிமையாளரைக் கொண்ட அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெயரை அப்ரார் பெற்றுள்ளார்.
ஆனால், காவ்யா மாறன் தலைமையிலான அணி நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு இந்திய ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்த நிலையில், சில மணி நேரங்களிலேயே சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கம் திடீரென முடக்கப்பட்டது. விதிமீறல் காரணமாக முடக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டாலும், உண்மையான காரணம் குறித்து நிர்வாகம் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.
பயிற்சியாளர் விளக்கம்: இந்த ஏலத்தில் காவ்யா மாறனுடன் பங்கேற்ற தலைமைப் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி கூறுகையில், "ஆஸ்திரேலிய வீரர்களிடம் அப்ரார் அகமதுவின் பந்துவீச்சு குறித்துக் கேட்டறிந்த பின்னரே அவரைத் தேர்வு செய்தோம். பாகிஸ்தான் வீரரை எடுப்பது தொடர்பாகத் தனிப்பட்ட ஆலோசனைக் கூட்டங்கள் எதுவும் நடத்தப்படவில்லை," எனத் தெரிவித்தார்.
ஐபிஎல்-லில் எதிரொலிக்குமா?
ஏற்கனவே ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் தென்னாப்பிரிக்க டி20 தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய அணிகளைச் சன் குழுமம் நிர்வகித்து வருகிறது. இதுவரை அந்த அணிகளில் பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெற்றதில்லை. தற்போது இங்கிலாந்து தொடரில் பாகிஸ்தான் வீரரை ஒப்பந்தம் செய்திருப்பது, ஐபிஎல் தொடரிலும் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான விமர்சனங்களை உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாநில கால்பந்து போட்டி: சென்னையை வீழ்த்தி காயல்பட்டினம் அணி அரையிறுதிக்கு தகுதி!
திங்கள் 25, மே 2026 8:50:39 AM (IST)

அகில இந்திய ஹாக்கி: ஜலந்தர், மும்பை அணிகள் வெற்றி!
திங்கள் 25, மே 2026 8:22:12 AM (IST)

மும்பையை வீழ்த்தி பிளே-ஆஃப் சுற்றிற்குள் நுழைந்தது ராஜஸ்தான்! – பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் அணிகள் வெளியேற்றம்!
ஞாயிறு 24, மே 2026 8:58:42 PM (IST)

சென்னை அணி மீண்டும் கம்பீரமாக வலம் வரும் ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!
வெள்ளி 22, மே 2026 5:15:04 PM (IST)

வைபவ் சூர்யவன்ஷி அதிரடி: லக்னோவை வீழ்த்தி பிளே-ஆப் வாய்ப்பைத் தக்கவைத்தது ராஜஸ்தான்!
புதன் 20, மே 2026 5:15:00 PM (IST)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது ஹைதராபாத்!
செவ்வாய் 19, மே 2026 10:55:16 AM (IST)


