» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
நாக் அவுட் போட்டிகளை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ளுங்கள்: இந்திய அணிக்கு மெக்ரா அறிவுரை!
செவ்வாய் 3, மார்ச் 2026 12:34:58 PM (IST)
2026 ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதியில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்நிலையில், நாக் அவுட் போட்டிகளின் அழுத்தம் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ரா தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
1999 முதல் 2007 வரை ஐசிசி தொடர்களில் ஆஸ்திரேலியா அசைக்க முடியாத அணியாகத் திகழ்ந்தபோது, அந்த வெற்றிகளில் முக்கியப் பங்கு வகித்த மெக்ரா, திங்களன்று சென்னையில் உள்ள எம்.ஆர்.எஃப் (MRF) வேகப்பந்து வீச்சு அகாடமியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:"இந்திய அணி நாக் அவுட் போட்டிகளை அழுத்தம் (Pressure) இல்லாமல், மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும். எங்களைப் பொறுத்தவரை, இறுதிப் போட்டிக்குள் நுழைவதற்கான அந்தப் போராட்டம்தான் சவாலானது. ஒருமுறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டால், கோப்பையை வென்றுவிட்டதாகவே கருதுவோம்."
"டாப் அணிகளும், சிறந்த வீரர்களும் இறுதிப் போட்டியில் தங்களது ஆட்டத்திறனை (Performance) அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவார்கள். உலகக் கோப்பைத் தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறுவது என்பது ஒரு வழிமுறை (Process) மட்டுமே. ஆனால், அந்த இறுதிப் போட்டியில் வெல்வதுதான் உண்மையான இலக்கு. அழுத்தத்தையே மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டால், ஆட்டத்தின் தரம் உயரும். ஆஸ்திரேலிய அணி எப்போதும் நெருக்கடியான நேரங்களில் மிகச் சிறப்பாக விளையாடும்," என்று அவர் தெரிவித்தார்.
இந்திய அணியின் நட்சத்திரப் பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவைப் பாராட்டிய மெக்ரா, "இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா பெரிய போட்டிகளுக்கான வீரர் (Big Game Player) என்பதில் சந்தேகமில்லை. அவரைப் போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் முக்கியமான தருணங்களில் தங்கள் திறமையை இன்னும் சிறப்பாக வெளிப்படுத்துவார்கள். பெரிய சவால்களை அவர்கள் விரும்பி ஏற்றுக்கொள்வார்கள். பெரிய போட்டிகள் என்று வரும்போது பும்ரா மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது," என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாநில கால்பந்து போட்டி: சென்னையை வீழ்த்தி காயல்பட்டினம் அணி அரையிறுதிக்கு தகுதி!
திங்கள் 25, மே 2026 8:50:39 AM (IST)

அகில இந்திய ஹாக்கி: ஜலந்தர், மும்பை அணிகள் வெற்றி!
திங்கள் 25, மே 2026 8:22:12 AM (IST)

மும்பையை வீழ்த்தி பிளே-ஆஃப் சுற்றிற்குள் நுழைந்தது ராஜஸ்தான்! – பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் அணிகள் வெளியேற்றம்!
ஞாயிறு 24, மே 2026 8:58:42 PM (IST)

சென்னை அணி மீண்டும் கம்பீரமாக வலம் வரும் ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!
வெள்ளி 22, மே 2026 5:15:04 PM (IST)

வைபவ் சூர்யவன்ஷி அதிரடி: லக்னோவை வீழ்த்தி பிளே-ஆப் வாய்ப்பைத் தக்கவைத்தது ராஜஸ்தான்!
புதன் 20, மே 2026 5:15:00 PM (IST)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது ஹைதராபாத்!
செவ்வாய் 19, மே 2026 10:55:16 AM (IST)


