» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வீட்டிற்கு வீடு பட்டதாரிகள் உருவானதற்கு திராவிட இயக்கமே காரணம்: மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 12:42:13 PM (IST)

தமிழகத்தில் இன்றைக்கு ஊருக்கு ஊர், கிராமத்திற்கு கிராமம், வீட்டிற்கு வீடு பட்டதாரிகளும் மருத்துவர்களும் இருக்கிறார்கள் என்றால் அதற்குத் 'திராவிட இயக்கம்' தான் காரணம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற அமிர்தம் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது: அரை நூற்றாண்டுக்கு முன்பாகப் பார்த்தால், அத்தி பூத்தாற்போலத்தான் ஒரு மருத்துவடோ அல்லது பட்டதாரியோ இருப்பார்கள். ஆனால், இன்றைக்கு ஊருக்கு ஊர், கிராமத்திற்கு கிராமம், வீட்டிற்கு வீடு பட்டதாரிகளும் மருத்துவர்களும் இருக்கிறார்கள் என்றால் அதற்குத் 'திராவிட இயக்கம்' தான் காரணம் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.
திராவிட இயக்கத்தின் வழித்தோன்றலாக இந்த திருமணம் நடைபெறுகிறது. ஆனால், இந்த நிலை வருவதற்கு யார் காரணமாக இருந்தார்கள் என்பதை இன்றைய இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். A.ராசா கூறியது போல, "ஒரு மாற்றம் தமிழ்நாட்டில் ஏற்பட்டு, அது ஏமாற்றமாக மாறியிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் செய்த தவறு, கோடிக்கணக்கான மக்களை இன்றைக்குத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்."
மணமக்கள் இலக்கியா மற்றும் டாக்டர் கிரிதரா ஆகியோருக்கு நான் அதிகமாக அறிவுரை சொல்ல வேண்டிய அவசியமில்லை. நீங்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்ட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். பாரதிதாசன் கூறியது போல 'வீட்டிற்கு விளக்காக, நாட்டிற்குத் தொண்டர்களாக' மணமக்கள் வாழ வேண்டும் என வாழ்த்தி தனது உரையை நிறைவு செய்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அன்னை வேளாங்கண்ணி கெபி 44-வது ஆண்டு திருவிழா : தூத்துக்குடியில் கோலாகலத் தொடக்கம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 9:22:58 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் : நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:43:26 PM (IST)

மூதாட்டியைக் கட்டிப்போட்டு 44 கிராம் நகை பறிப்பு : பக்கத்து வீட்டுப் பெண் உட்பட 2 பேர் கைது!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:14:03 PM (IST)

பெண்ணைக் கொன்று வேக வைத்த கொடூர தம்பதி கைது: விசாரணையில் பகீர் தகவல்கள்!
சனி 29, ஆகஸ்ட் 2026 4:39:35 PM (IST)

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக: தமிழக அரசுக்கு தேமுதிக வலியுறுத்தல்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:50:02 AM (IST)

அஞ்சல்துறையில் 2,095 பணியிடங்கள்: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:34:39 AM (IST)


