» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண்ணைக் கொன்று வேக வைத்த கொடூர தம்பதி கைது: விசாரணையில் பகீர் தகவல்கள்!

சனி 29, ஆகஸ்ட் 2026 4:39:35 PM (IST)

MurderSuitcase.jpg

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் பெண்ணைப் படுகொலை செய்து, அவரது உடல் பாகங்களைச் சூட்கேஸில் அடைத்து ரயிலில் ஏற்றியும், மற்ற பாகங்களைப் பிரியாணி டபராவில் காய்கறிகளுடன் சேர்த்து வேக வைத்த கொடூரச் சம்பவத்தில் தொடர்புடைய கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரைப் போலிஸார் மணிப்பூரில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

அசாமைச் சேர்ந்த மாணிக் உத்தின் லஸ்கர் என்பவரும், அவரது மனைவி பகமதியும் கூடுவாஞ்சேரியில் தங்கியிருந்துள்ளனர். மாணிக் உத்தின் தான் பணியாற்றிய நிறுவனத்தில் பணிபுரிந்த தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ஹைதுல் நிஷா என்பவருடன் பழகி வந்துள்ளார். நிஷாவும் இவர்கள் வீட்டின் அருகிலேயே வாடகைக்குத் தங்கியிருந்துள்ளார்.

இவர்களது தொடர்பை அறிந்த மனைவி பகமதி குடும்பத்தில் சண்டையிட்டுள்ளார். அதேவேளையில், ஹைதுல் நிஷா தன்னையும் திருமணம் செய்துகொள்ளுமாறு மாணிக் உத்தினை வற்புறுத்தியுள்ளார். இதனால் நிஷாவைக் கொன்றுவிட்டு மனைவியுடன் தப்பிச் செல்ல மாணிக் திட்டமிட்டுள்ளார்.

திட்டப்படி, ஹைதுல் நிஷாவைக் கொலை செய்து, உடலின் சில பாகங்களைச் சூட்கேஸில் வைத்துச் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குக் கொண்டு வந்து, புது டெல்லி சென்ற ரயிலில் ஏற்றிவிட்டுள்ளனர். தலையை ஓரிடத்தில் வீசிவிட்டு, மீதி உடல் பாகங்களைக் காய்கறிகளுடன் சேர்த்துப் பிரியாணி அண்டாவில் வேக வைத்துள்ளனர். அதனை அப்புறப்படுத்துவதற்குள் போலிஸாருக்கு தகவல் தெரிந்ததால் இருவரும் தப்பியோடியுள்ளனர்.

ஆகஸ்ட் 3-ஆம் தேதி ரயிலில் சூட்கேஸில் சடலம் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, சிசிடிவி காட்சிகள் மற்றும் பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விசாரணையை முடுக்கிவிட்டனர். கொலையாளிகள் ஒரிசா வழியாக மணிப்பூருக்குத் தப்பியதை அறிந்த தாம்பரம் காவல் ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார், மணிப்பூரில் கடும் மழைக்கு இடையேயும் ஒரு வாரத்திற்கும் மேலாக முகாமமிட்டு இருவரையும் கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட நிஷாவின் தலை எங்கே வீசப்பட்டது என்பது குறித்தும், பிரியாணி அண்டாவில் வேக வைத்த உடல் பாகங்களை நாய்களுக்கு வீசத் திட்டமிட்டிருந்தனரா என்பது குறித்தும் போலிஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory