» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முந்தைய திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி வேளாண் பட்ஜெட் தாக்கல்! - எடப்பாடி பழனிசாமி சாடல்!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:48:02 PM (IST)
பொது பட்ஜெட்டைப் போலவே, முந்தைய திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி வேளாண் பட்ஜெட்டாகவும் அறிவித்துள்ளார்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் பட்ஜெட், எதிர்பார்த்துக் காத்திருந்த தமிழக விவசாயிகளுக்குப் பெருத்த ஏமாற்றத்தையே அளித்துள்ளது. தேர்தல் நேரத்தில் விவசாயிகளுக்கு இனிக்க இனிக்க வாக்குறுதிகளைக் கொடுத்தார்கள். ஆனால், அந்த வாக்குறுதிகள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.மேகேதாட்ட அணைக் விவகாரம் குறித்தோ, விவசாயிகளின் முக்கிய பிரச்சனைகள் குறித்தோ பட்ஜெட்டில் ஒரு வார்த்தை கூட இல்லை. ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட்டுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுத்தோம். ஆனால், இந்த வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண் தான் கொடுக்க முடியும்.
பொது பட்ஜெட்டைப் போலவே, முந்தைய திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி வேளாண் பட்ஜெட்டாகவும் அறிவித்துள்ளார்கள். திமுக ஆட்சியைப் போலவே தவெகவின் இந்த வேளாண் பட்ஜெட்டும் ஒரு நாடகமே ஆகும். வாக்குறுதியில் கூறியபடி விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை ஏமாற்றிவிட்டார்கள்.
சுமார் 20 துறைகளை ஒன்றாக இணைத்து வேளாண் பட்ஜெட் என்று கூறிக்கொள்கிறார்கள். அப்படியென்றால் அந்த 20 துறைகளுக்கும் தனித்தனி அமைச்சர்களும், மானியக் கோரிக்கைகளும் எதற்கு? வேளாண் பட்ஜெட் உரையை அமைச்சர் 2 மணி நேரம் 35 நிமிடங்கள் வாசித்ததைத்தான் பெரிய சாதனையாகப் பேசுகிறார்களே தவிர, இதனால் விவசாய மக்களுக்கு எந்தவொரு உண்மையான பயனும் கிடைக்கப்போவதில்லை." என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மதுரை - தூத்துக்குடி புதிய அகல ரயில் பாதை திட்டம் : ரூ.2.51 கோடி ஆலோசனைக் குழு டெண்டர் வெளியீடு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 9:23:56 PM (IST)

ஆடி கிருத்திகை விழா: தூத்துக்குடி சிவன் கோவிலில் அம்மனுக்கு ஊஞ்சல் சேவை - திரளான பெண்கள் வழிபாடு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 8:11:56 PM (IST)

உதயநிதி ஸ்டாலின் காரில் ஏற முயன்ற எடப்பாடி பழனிசாமி: சட்டசபை வளாகத்தில் பரபரப்பு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 4:58:38 PM (IST)

அரசுப் பள்ளி சாதனை: நீட் தேர்வில் வென்று 10 மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்குத் தேர்வு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 3:24:24 PM (IST)

தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலய 141-வது ஆண்டு திருவிழா: திருத்தேர் பவனி கோலாகலம்!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:18:30 PM (IST)

உழவர் சந்தைகளைப் புனரமைக்க ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு: வேளாண் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:04:54 PM (IST)



உன்Aug 6, 2026 - 01:11:11 PM | Posted IP 162.1*****