» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி வியாபாரியிடம் ரூ.19 லட்சம் மோசடி: பெங்களூரு வாலிபர் கைது!

வியாழன் 16, ஜூலை 2026 7:33:10 AM (IST)

தூத்துக்குடி வியாபாரியிடம் ஆன்லைன் முதலீடு மூலம் 19 லட்சம் ரூபாய் சைபர் கிரைம் மோசடியில் ஈடுபட்ட கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு வாட்ஸ்ஆப் மூலம் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி எண்ணை வியாபாரி தொடர்பு கொண்டுள்ளார். தொடர்ந்து எதிர்தரப்பினர் கூறிய விபரங்களை நம்பி, குறிப்பிட்ட வங்கி எண்ணிற்குப் பணம் அனுப்பியுள்ளார். ஆரம்பத்தில் சிறிய தொகைக்கு லாபம் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பல தவணைகளாக மொத்தம் 19 லட்சம் ரூபாய் வரை வியாபாரி அனுப்பியுள்ளார். ஆனால், பல மாதங்களாகியும் பணம் திருப்பி வரவில்லை. அத்துடன் தொடர்பு கொண்ட தொலைபேசி எண்ணும் அணைக்கப்பட்டு இருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வியாபாரி இது குறித்துத் தூத்துக்குடி சைபர் கிரைம் காவல் பிரிவில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பெங்களூரு பகுதியைச் சேர்ந்த வைஷ்ணவ் மகன் முகேஷ் (36) இந்த மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீசார் முகேஷைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திப் பேரூரணி சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory