» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கூடங்குளம் அணுமின் நிலையத் தகவல்கள் கசிவுப் புகார்: இந்திய அணுசக்தி கழகம் மறுப்பு!
வியாழன் 16, ஜூலை 2026 3:55:08 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் இணையத்தில் கசிந்துள்ளதாக வெளியான தகவல்களை இந்திய அணுசக்தி கழகம் (NPCIL) மறுத்துள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அலகுகள் இங்கு செயல்பாட்டில் உள்ள நிலையில், மேலும் நான்கு அலகுகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இச்சூழ்நிலையில், 'வேர்ல்டு லீக்ஸ்' என்ற இணைய ஊடுருவலாளர் (Hacker) குழு, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் வரைபடங்கள் மற்றும் உதிரிபாகங்கள் விநியோகிப்பாளர் விபரங்கள் அடங்கிய ஆவணங்களைப் பொதுவெளியில் வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்தது.
இந்தத் தரவுக் கசிவுப் புகாரைத் தேசிய அணுசக்தி ஆணையம் மற்றும் NPCIL நிர்வாகம் ஆகியவை மறுத்துள்ளன. இது தொடர்பாக மூத்த அணுசக்தி விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், அணுமின் நிலையத்தின் கணினித் தரவுக் கசிவுப் புகாருக்கும், அணுசக்தி பாதுகாப்பு உள்கட்டமைப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், NPCIL நிர்வாக இயக்குநர் ராஜேஷ் வெளியிட்டுள்ள விளக்கத்தில், அணுமின் நிலையத்தின் பாதுகாப்புத் தகவல்கள் எதுவும் திருடப்படவில்லை என்றும், அணு பாதுகாப்பு தொடர்பான ரகசியத் தரவுகள் எதுவும் வெளியேறவில்லை என்றும், முக்கியத் தகவல்கள் கசிந்ததாகக் கூறப்படும் செய்திகள் உண்மையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வருடாந்திர நிகர லாபம் ரூ.1,337.55 கோடியாக உயர்வு: நிதிநிலை அறிக்கை வெளியீடு!
வியாழன் 16, ஜூலை 2026 5:17:04 PM (IST)

சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சிப் பொறுப்புகள் பறிப்பு: இபிஎஸ் அதிரடி!
வியாழன் 16, ஜூலை 2026 3:16:27 PM (IST)

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு: வாட்ஸ்-அப் மூலம் புகார் அளிக்க புதிய எண் அறிவிப்பு!
வியாழன் 16, ஜூலை 2026 12:21:22 PM (IST)

கும்பகோணம் பள்ளித் தீ விபத்தின் 22-ஆம் ஆண்டு நினைவு தினம்: பொதுமக்கள் அஞ்சலி!
வியாழன் 16, ஜூலை 2026 11:38:11 AM (IST)

கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து: தம்பதி பலி!
வியாழன் 16, ஜூலை 2026 8:46:32 AM (IST)

சாலையில் நடந்து சென்ற பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபர் கைது!
வியாழன் 16, ஜூலை 2026 8:00:31 AM (IST)


