» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுகவினர் ஓடி ஒளிபவர்கள் அல்ல: அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி!

ஞாயிறு 12, ஜூலை 2026 9:20:58 AM (IST)

திமுகவினர் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஓடி ஒளிபவர்கள் கிடையாது; சம்பவ இடத்தில் நின்று பணியாற்றும் தலைவர்களாக இருப்பார்கள் என்று தமிழக முதல்வருக்குச் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்தநாளை முன்னிட்டு, நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அவரது உருவச்சிலைக்குச் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின் செய்தியாளர்களைச் சந்தித்த அனிதா ராதாகிருஷ்ணன், எழுதி கொடுத்து மேடைக்கு மேடை பேசுவது திமுகவினருக்குத் தெரியாது எனக் குறிப்பிட்டார். 

தமிழக முதல்வர் விஜய், எழுதி கொடுத்ததைப் பார்த்து மேடையில் பேசி வருகிறார் என்றும், பேசும் போது மறந்தவுடன் அருகில் உள்ள காகிதத்தை எடுத்துப் பார்த்துப் படிக்கிறார் என்றும் விமர்சித்தார். இவை அனைத்தையும், அமைச்சர்களின் செயல்பாடுகளையும் பொது மக்கள் கவனித்து வருவதால் இதற்கான முடிவு விரைவில் வரும் எனச் சுட்டிக்காட்டினார்.

41 பேர் இறந்த கரூர் சம்பவத்தின் போது திருச்சியிலிருந்து தமிழக முதல்வர் விஜய் ஓடியதை அனைவரும் பார்த்தனர் என அனிதா ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார். திமுகவைச் சேர்ந்தவர்கள் ஓடி ஒளிபவர்கள் அல்லர் எனவும், சம்பவ இடத்தில் நின்று பணியாற்றுபவர்களே திமுகவினர், அப்படி ஓடுபவர்கள் திமுகவினராக இருக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory