» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கனிமொழி எம்.பி. வாகனம் தடுத்து நிறுத்தம்; 1 கி.மீ நடந்து சென்று அழகுமுத்துக்கோன் சிலைக்கு மரியாதை!
சனி 11, ஜூலை 2026 12:55:07 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள காட்டலங்குளத்தில் நடைபெற்ற மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழாவில், திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. வாகனம் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, காட்டலங்குளத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காகக் கனிமொழி கருணாநிதி எம்.பி. வருகை தந்தார். அப்போது பாதுகாப்பு காரணங்களைக் காட்டி அவரது வாகனத்தைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
வாகனத்தை உள்ளே அனுமதிக்கக் கோரிக் கனிமொழி எம்.பி. மற்றும் திமுக கழக நிர்வாகிகள் காவல்துறையினரிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், வாகனத்தை உள்ளே செல்லக் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. காவல்துறையினர் அனுமதி மறுத்ததால், கனிமொழி எம்.பி. தனது வாகனத்தில் இருந்து உடனடியாக இறங்கி, சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றார்.
காட்டலங்குளத்தில் உள்ள மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் விளாத்திகுளம் ஜி.வி. மார்க்கண்டேயன், கோவில்பட்டி கருணாநிதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கயத்தாறு முன்னாள் யூனியன் சேர்மன் மாணிக்கராஜா, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் திஷா குழு ஆய்வுக் கூட்டம்: கனிமொழி எம்.பி. தலைமையில் அரசு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை!
சனி 11, ஜூலை 2026 8:45:47 PM (IST)

அரசு வழக்கறிஞர்கள் நியமன விவகாரம்: தவெக குற்றச்சாட்டுக்குக் கனிமொழி எம்.பி. பதிலடி!
சனி 11, ஜூலை 2026 8:19:18 PM (IST)

ஸ்டார் 3.0 மென்பொருள் கலந்துரையாடல்: பத்திரம் எழுத்தர்களுக்குச் சார் பதிவாளர் ஆலோசனை!
சனி 11, ஜூலை 2026 8:12:23 PM (IST)

கரூர் 3,084 ஏக்கர் நில விவகாரம் : தமிழக அரசுக்கு அண்ணாமலை ஆதரவு
சனி 11, ஜூலை 2026 5:26:04 PM (IST)

பதவிப் பிரமாணத்திற்கு எதிரான குற்றம்: முதல்வர் விஜய்க்கு அப்பாவு கண்டனம்!
சனி 11, ஜூலை 2026 5:15:59 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி., - பெல்ஜியம் ஆண்ட்வெர்ப் துறைமுகங்கள் இடையே சர்வதேச ஒப்பந்தம்!
சனி 11, ஜூலை 2026 4:28:30 PM (IST)


