» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு மருத்துவமனைகளில் குறைகளைக் களைய 50 அதிகாரிகள் நியமனம்: சுகாதாரத்துறை அதிரடி!

சனி 11, ஜூலை 2026 12:06:38 PM (IST)

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவி வரும் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளைச் சரி செய்யத் தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவ உள்கட்டமைப்பு, சுகாதாரம், டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையைச் சரி செய்தல், அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்துவது அவசியம் என அரசு அறிவுறுத்தியிருந்தது. இத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 50 தொடர்பு அதிகாரிகளை நியமிக்க மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (DME) முறைப்படி உத்தரவிட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் வரும் புகார்களுக்கு உடனடித் தீர்வு காணும் வகையில் இப் புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, அந்தந்த அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ நிலைய அதிகாரி (RMO) அல்லது மருத்துவக் கண்காணிப்பாளர் ஆகியோரில் ஒருவர் தொடர்பு அதிகாரியாகச் செயல்படுவார். இவர்களின் கீழ் டாக்டர்கள், செவிலியர்கள் அடங்கிய குழுவினர் பணியாற்றுவார்கள்.

இவ்வதிகாரிகளை மாநில அளவில் ஒருங்கிணைக்கும் முக்கியப் பொறுப்பிற்குப் பேராசிரியர் சுதர்ஷினி நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்காக, மருத்துவக் கல்வி இயக்குனரக அலுவலகத்தில் 'தொடர்பு அதிகாரி பிரிவு' என்ற புதிய பிரிவு தனியாகத் தொடங்கப்பட உள்ளது. மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளைத் தீவிரமாக ஆய்வு செய்து, சீரமைக்கப்பட்ட பணிகளைத் தொடர் அறிக்கையாகச் சமர்ப்பிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory