» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோயில்களில் முறைகேடு, லஞ்சம் புகார் அளிக்க அமைச்சர் இ-மெயில் முகவரி வெளியீடு!

வெள்ளி 3, ஜூலை 2026 12:45:54 PM (IST)

RAmeshTcr.jpg

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் முறைகேடுகள், லஞ்சம் குறித்து புகார் அளிக்க அமைச்சரின் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு ([email protected]) தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள்.

நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory