» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மீன் ஏற்றுமதி நிறுவனத்தில் அமோனியா வாயுக் கசிவு சம்பவம்: உயிரிழப்பு 18-ஆக உயர்வு
வெள்ளி 3, ஜூலை 2026 11:14:29 AM (IST)

திருவள்ளூா் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே கடல் மீன் ஏற்றுமதி செய்யும் தனியாா் தொழிற்சாலையில் அமோனியா வாயுக் கசிந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேலும் இருவா் உயிரிழந்தனா். இதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் கடல் உணவுப் பொருள்களைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தனியாா் நிறுவனத்தில் ஜூன் 21-ஆம் தேதி அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது.
வாயுக் கசிவு ஏற்பட்டதால், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் சுமார் 80 பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட நிலையில், ஜூன் 28 ஆம் தேதி வரையில் சிகிச்சை பலனின்றி 16 பேர் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை காலை (ஜூலை 1) சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சனா ஜுவாங்க் (25) உயிரிழந்தார்.
இந்த நிலையில், வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஒடிஸாவை சேர்ந்த மகாராணா ஜுவாங்க் (29) உயிரிழந்தார். இதையடுத்து, அமோனியா வாயுக் கசிவு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே, மஞ்சங்காரணை தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, செங்குன்றம் தனியார் மருத்துவமனை, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 25-க்கும் மேற்பட்டோர் குணமாகியுள்ளனர். மேலும், மருத்துவமனைகளில் உள்ள சுமார் 35 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சி சோதனையில் ரூ.7.49 லட்சம் ரொக்கம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை!
வெள்ளி 3, ஜூலை 2026 7:27:38 PM (IST)

குதிரை பேர விவகாரத்திற்கு முதலமைச்சர் விஜய் சிபிஐ விசாரணை கேட்பாரா? அப்பாவு கேள்வி!
வெள்ளி 3, ஜூலை 2026 5:16:19 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அதிரடி சோதனை!
வெள்ளி 3, ஜூலை 2026 4:59:24 PM (IST)

ஆட்சியைக் கவிழ்க்கச் சதித் திட்டம்: செந்தில் பாலாஜியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்!
வெள்ளி 3, ஜூலை 2026 3:55:01 PM (IST)

கோயில்களில் முறைகேடு, லஞ்சம் புகார் அளிக்க அமைச்சர் இ-மெயில் முகவரி வெளியீடு!
வெள்ளி 3, ஜூலை 2026 12:45:54 PM (IST)

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது: ஆதரவாளர்கள் முற்றுகை - மறியல் - பரபரப்பு!
வெள்ளி 3, ஜூலை 2026 12:16:44 PM (IST)


